ஓபன் நாமினேஷனில் சிக்கிய 3 போட்டியாளர்கள்.. தாய்க்கிழவியா, சைக்கோவா காலி செய்யப் போகும் பிக்பாஸ்

BB7 Open Nomination: கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் 22 நாட்களை கடந்து இருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் உக்கிரமாக நடந்து கொண்டதன் காரணமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து திங்கட்கிழமை ஆன இன்று நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்பது போல் இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எல்லோரும் பிக் பாஸ் தூண்டி விடுவதற்கு முன்பே அவர்களே சண்டை போட்டு கண்டன்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வீடுகள் என்று ஆரம்பிக்கப்பட்ட சர்ச்சை இன்று போர்க்களமாகவே மாறிவிட்டது. இதில் ஓபன் நாமினேஷன் என்ற பெயரில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் பிக் பாஸ்.

எப்போதுமே மற்ற சீசன்களில் எபிசோடுகளை கடந்த பிறகு தான் ஓபன் நாமினேஷன் நடத்தப்படும். ஆனால் இந்த சீசனில் நான்காவது வாரமே ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டு இருக்கிறது. பிக் பாஸ் இதை அறிவிப்பதற்கு முன்னரே போட்டியாளர்கள் யார் யாரை நாமினேட் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஐஷு, பிரதீப் ஆண்டனியை நாமினேட் செய்வது சுத்த வேஸ்ட் என சொல்லி இருக்கிறார்.

ஐஷு சொன்னது போல் இனி வரும் வாரங்களில் எத்தனை தடவை பிரதீப்பை டாமினேட் செய்யப்பட்டாலும் கண்டிப்பாக அவர் சேவ் ஆகிவிடுவார். பிரதீப் ஒவ்வொரு முறையும் சேவ் ஆகும்பொழுது மூன்றாவது சீசனில் கவின் சேவ் ஆகி வந்தது தான் ஞாபகம் வருகிறது பார்வையாளர்களுக்கு. இருந்தாலும் மனம் தளராது விசித்ரா மற்றும் வினுஷா போன்றவர்கள் இன்றைய ஓபன் நாமினேஷனில் பிரதீப்பை நாமினேட் செய்திருக்கிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர் மணி இன்று அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அதிலும் ஐஷு மணியை நாமினேட் செய்யும் போது மணி பார்வையாளர்களை என்டர்டைன் செய்வது போல் தெரியவில்லை, அவர் ரவீனாவை என்டர்டைன் செய்வதில் தான் ஆர்வமாக இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.இதற்கு நிறைய பேர் அதுதான் உண்மை என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் ஐஷுவுக்கு மணி மீது இருக்கும் காண்டு தான் இப்படி சொல்லி இருக்கிறார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கடந்த மூன்று வாரங்களாக ஏதோ ஒரு காரணங்களால் மாயா மீண்டும் மீண்டும் தப்பித்து வருகிறார். சளைக்காது போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த வாரத்திலும் மாயா அதிகப்போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். யுகேந்திரன் மாயா எப்போதுமே மாயையாக இருக்கிறார் என்று சொல்லி நாமினேட் செய்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்