சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மீண்டும் கலவரமான பிக் பாஸ் வீடு.. சைக்கோவுடன் முட்டி மோதிய விஷ்ணு, அடுத்த ரெட் கார்டு ரெடி

Bigg Boss Season 7 Promo: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் போய்க்கொண்டிருக்கிறது. சும்மா எல்லாரும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்களே எப்போது தான் டாஸ்க் செய்வார்கள் என்று பார்வையாளர்கள் கடந்த வாரம் வரை கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். இனி எங்களிடம் டாஸ்கே எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லும் அளவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க் நடைபெற்றது.

இதன் விளைவாக கமலஹாசன் நேற்று, போட்டி கைகலப்பாக மாறும் பொழுது அதை உடனே நிறுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தார். மேலும் விஜய் வர்மா நேற்று வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் ஆக பூர்ணிமா தேர்வாகி இருக்கிறார். போதாத குறைக்கு இன்று ஓபன் நாமினேஷன் வேறு நடைபெற்று இருக்கிறது.

இந்த வாரத்தின் தலைவர் பூர்ணிமாவை அதிகம் வறாதவர்கள் என்ற லிஸ்டில் பிரதீப், நிக்ஸன், மணி, யுகேந்திரன், அனன்யா,ஜோவிகா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வீட்டின் கிளீனிங் வேலையை செய்வதற்காக டாஸ்க் வைக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டின் சார்பாக விஷ்ணுவும், ஸ்மால் பாஸ் வீட்டின் சார்பாக மணியும் கலந்து கொண்டார்கள்.

சேரில் உட்கார்ந்து கொண்டு கால்பந்து விளையாடி அதிகம் கோல் சேர்ப்பவர்கள் தான் வின்னர் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பிக் பாஸ் வீட்டை சேர்ந்த விஷ்ணு வெற்றி பெற்றார். இதனால் டென்ஷன் ஆன நிக்சன் நடுவராக இருந்த பூர்ணிமாவை எதிர்த்து கேள்வி கேட்டதோடு ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் கேப்டன் டவுன் என கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த சலசலப்பில் திடீரென விஷ்ணு விஜய் மற்றும் பிரதீப் ஆண்டனிக்கு இடையே மோதலாகிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கத்த ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே முதல் வாரத்தில் பிரதீப்பிடம் தவறுதலாக பேசிய விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் கார்டு கொடுக்கப்பட்டது தான் இந்த ப்ரோமோ வீடியோவை பார்க்கும் பொழுது நினைவுக்கு வருகிறது.

மேலும் இந்த வாரத்தின் ஓபன் நாமினேஷனில் பிரதீப், மணி மற்றும் மாயா அதிக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே மணி மற்றும் ரவீனாவை வேறு வேறு வீட்டில் பிரித்துப் போட்டது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த இருவரில் ஒருவர் இந்த வாரம் நன்றாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

Trending News