BB7 3rd Week Elimination: விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி கிட்டதட்ட 20 நாட்கள் ஆகிவிட்டது. முதல் வாரமே அனன்யா ராவ் எலிமினேஷன் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து பவா செல்லதுரை வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரம் மொத்தம் 11 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சீசனில் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகளை வைத்து கண்டன்டு மேல் கண்டன்ட் கொடுத்து வருகிறார்கள். காமெடி, சண்டை, சச்சரவு என எதற்குமே பஞ்சமில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் நேற்று வைத்த ஆக்சிஜன் டாஸ்கெல்லாம் இதுவரைக்கும் எந்த சீசனிலும் பார்த்திராத அளவுக்கு பயங்கரமாக இருந்தது. பிக் பாஸே டென்ஷன் ஆகி டாஸ்கை நிறுத்தும் அளவுக்கு போய்விட்டது.
பிரச்சனையை இன்னும் சூடேற்றும் விதமாக இன்று காலை வெளிவந்த ப்ரோமோவில் அந்தப் போட்டியில் ஜெயிக்காத பிக் பாஸ் வீட்டினர் யாரும் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது என அறிவிக்கப்பட்டது .அந்த நேரத்தில் எப்போதும் போல மாயா தன்னுடைய வில்லத்தனமான முகத்தை காட்டினார். பிக் பாஸ் வீட்டினர் பசியில் இருக்கும் பொழுது தட்டு நிறைய சாப்பாடு போட்டு கொண்டு நக்கலாக சிரித்தபடி வந்தார்.
பார்வையாளர்கள் மாயா மீது செம காண்டில் இருக்கிறார்கள். இந்த முறை மாயாவோடு சேர்ந்து பிரதீப், நிக்சன், ஐஷு, மணி, விசித்ரா, விக்ரம், பூர்ணிமா, விஜய், வினுஷா, அக்ஷயா நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். இதில் மாயா, வினுஷா மற்றும் அக்ஷயா குறைந்த அளவு ஓட்டுக்களையே பெற்றிருக்கிறார்கள். இந்த மூன்று பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த வாரமும் மாயா கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். பவா செல்லத்துரையை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா வெளியேறி இருக்கிறார். இவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கு உடல்நிலை தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த வாரம் எலிமினேஷனும் இருக்காது. வினுஷா வெளியேறியதன் உண்மை காரணம் இனிவரும் நாட்களில் தான் தெரியும்.
பிக் பாஸ் சீசனின் வைல்டு கார்டு என்ட்ரி யாராக இருக்கும் எனவும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் டிவி சீரியல் நடிகை வி ஜே அர்ச்சனா உள்ளே வர இருக்கிறார் என்பது உறுதியாக இருக்கிறது. தற்போது அவரை தொடர்ந்து கானா பாலா வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வர இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் இவர்கள் இருவரது என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.