ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிக் பாஸ் வீட்டிற்குள் சபதம் போட்ட மாயா.. கைதட்டி வெறுப்பேற்றிய ஆடியன்ஸ்கள்

Bigg Boss Maya: விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஏழாவது சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. முன்பு எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு, இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளர்களும் கன்டென்ட் கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மற்ற ஆறு சீசன்களையும் நுணுக்கமாக கரைத்துக் குடித்து தான் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்கள்.

கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிய போராட்டமே நடந்தது. ஆண்டவர் நேற்றைய எபிசோடில் கூட நியாயத்திற்காக நடந்த போராட்டத்தில் ஒரு நியாயம் வேண்டாமா என்று சூடு போடும் அளவிற்கு கேள்வி கேட்டிருந்தார். மேலும் பிரதீப் மற்றும் ஜோவிகாவுக்கு இடையே நடந்த பிரச்சனை, நேற்றைய எபிசோடில் விஷ்ணு மற்றும் ஜோவிகாவுக்கு இடையே நடந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது.

ஓவியா, கவின், ஆரி வரிசையில் இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கும் பிரதீப் ஆண்டனிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதேபோன்று ஏஜென்ட் கேங் என சுற்றி தெரியும் மாயா மீது நாளுக்கு நாள் வெறுப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பலருக்குமே மாயாவை பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இந்த வாரம் மாயாவை எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என தான் பிக் பாஸ் ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக பவா செல்லதுரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை. மேலும் மாயாவும் வெளியில் பிரதீப்புக்கு ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரிடம் கொஞ்சம் பம்மி கொண்டு தான் பேசினார்.

இருந்தாலும் மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சபதத்தை போட்டிருந்தார். அதாவது இந்த வார கமலஹாசன் எபிசோடுகளில் பிரதீப்பிற்கு ஆடியன்ஸ்கள் கைத்தட்டினால் நானே முன்வந்து வீட்டை விட்டு என்னை வெளியேற்றுங்கள் என்று சொல்லி விடுவேன் என சொல்லியிருந்தார். நெட்டிசன்கள் மாயாவை வெறுப்பேற்றுவதற்காகவே பிரதீப்பிற்கு கை தட்டுங்கள் என பிக் பாஸ் ஆடியன்ஸ்களிடம் சொல்லி இருந்தார்கள்.

அதேபோன்று கமலஹாசன் பிரதீப் சேவ் ஆகிவிட்டார் என்று சொல்லியபோது ஆடியன்ஸ்கள் கைதட்டி இருக்கிறார்கள். கமலுக்கு மாயாவின் சபதம் நினைவுக்கு வரவே, அதை ஹவுஸ் மேட் முன்னிலையிலேயே மாயாவிற்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார். மாயா இதுக்கு என்ன பதில் அளிப்பார் என்று இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

- Advertisement -

Trending News