சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பயில்வானை சிக்கவைக்க பிளான் போட்ட பிரபலம்.. தோண்டிய குழியில் தானே விழுந்த பரிதாபம்

யூடியூப் சேனல் மூலமாக சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய பல ரகசியங்களை புட்டு புட்டு வைப்பவர் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். இதனால் அவர் பல சர்ச்சைகளுக்கு ஆளானாலும் தொடர்ந்து தைரியமாக பல கருத்துகளை கூறி வருகிறார்.

அந்த வகையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் இவரை பேட்டி எடுத்த தொகுப்பாளினி லயா இவரை சரமாரியாக கேள்வி கேட்டார். டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான லயா தற்போது தொகுப்பாளினியாகவும் மாறி இருக்கிறார்.

அந்தப் பேட்டியில் பயில்வானிடம் அவர் ரொம்பவும் எக்குத்தப்பான கேள்விகளை கேட்டார். அது அனைத்திற்கும் பயில்வான் பொறுமையாக பதில் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருக்கும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பார்க்க வேண்டும் என்று லயா கேட்டார்.

ஆனால் பையில்வான் நாகரீகம் கருதி அந்த போட்டோக்களை காட்ட மறுத்தார். ஆனாலும் விடாத லயா தன்னுடைய அடாவடியான பேச்சின் மூலம் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பயில்வானை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இப்படி பேசுவதாக கூறி வந்தனர்.

மேலும் அவருடைய திமிரான பேச்சுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன், லயா குறித்த பல அந்தரங்க விஷயங்களை மீடியாவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லயாவின் மீது ஏகப்பட்ட மோசடி புகார் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் மீது சில வழக்குகளும் பதியப்பட்டு நிலுவையில் இருந்து வருவதாக பயில்வான் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருடைய கள்ளக்காதல் விவகாரம் பற்றியும் அவர் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் சினிமாவில் இருக்கும் பலரின் முகத்திரையை கிழித்தவர் பயில்வான். அவரை சிக்க வைக்க பிளான் போட்ட லயா தற்போது அவரே சிக்கி விட்டார் என்று கலாய்த்து வருகின்றனர். இதன் மூலம் பையில்வானுக்கு வெட்டிய குழியில் லயா தானே சென்று விழுந்து விட்டதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் ஏதோ நினைத்து செய்யப்போக இப்படி அந்தரங்க விஷயங்கள் அம்பலமாகி விட்டதே என்று லயாவும் கலக்கத்தில் இருக்கிறாராம்.

- Advertisement -

Trending News