பெட்ரூம் திறந்திருந்தா எட்டிப் பார்க்கத்தான் செய்வேன்.. உச்ச கட்ட திமிருடன் பேசிய பயில்வான்

திரைப்பட விமர்சகர், யூடியூப் பிரபலம், பத்திரிகையாளர், நடிகர் என்று பன்முகம் கொண்ட பயில்வான் ரங்கநாதன் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை மட்டுமே பேசி வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான விஷயத்தை பேசி இருக்கிறார். அதாவது பயில்வான் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்கத்தை பற்றி பொது வெளியில் வெளிப்படையாக கூறி வருகிறார். அவர் கூறுவது உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் இதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

நான் எப்போதும் உண்மையை மட்டும் தான் கூறுவேன், என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று அடிக்கடி கூறும் பயில்வான் தற்போது அந்தரங்கமான விஷயத்தை எதற்காக நடுரோட்டில் காட்டுகிறீர்கள். பணத்திற்காக ஏன் ஆபாசமாக நடிக்கிறீர்கள் என்று மீண்டும் நடிகைகளை வம்பிழுக்கும் விதமாக பேசியுள்ளார்.

மேலும் நான் யாருடைய பெட்ரூமையும் எட்டிப் பார்க்கவில்லை. உங்களின் பெட்ரூம் திறந்திருந்தால் நான் பார்க்கத்தான் செய்வேன் என்று திமிருடன் கூறியிருக்கிறார். வேண்டுமென்றால் உங்கள் பெட்ரூமை மூடி வையுங்கள் என்று அவர் கூறியிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் நான் தேவயானி, நதியா, சுவலட்சுமி போன்ற நடிகைகளை பற்றி பேசுவது கிடையாது. ஏனென்றால் அவர்கள் கவர்ச்சியாகவோ, ஆபாசமாகவோ நடித்தது கிடையாது. காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துடிக்கும் நடிகைகளை பற்றி தான் நான் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் அந்தரங்க விஷயத்தை நான்கு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் நடுரோட்டில் காட்டினால் நான் பேச தான் செய்வேன். மேலும் நான் பொய்யை சித்தரித்து கூறினால் எனக்கு இவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். பயில்வானின் இந்த பேச்சுக்கு ஒரு சிலர் ஆதரவு தந்தாலும், சில ரசிகர்கள் அவர் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதாக பேசி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்