வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சிவகார்த்திகேயன் மேல் மட்டும் தவறு சொல்ல முடியாது.. கொழுந்துவிட்டு எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றும் பயில்வான்

Sivakarthikeyan-Bayilvan: நேற்று இணையத்தில் பூதாகரமாக வெடித்த விஷயம் இமான் சிவகார்த்திகேயன் பற்றி பேசியதுதான். அதாவது சிவகார்த்திகேயனை பின்னனி பாடகராக அறிமுகம் செய்த இமானுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என செய்தி வெளியானது. அதுவும் இமானே இதை வெளிப்படையாக சொல்லி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது.

இதனால் சிவகார்த்திகேயன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக உள்ளது. சினிமா விமர்சகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை மோசமாக விமர்சித்து இருந்தனர். இந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார். அதிலும் பேட்டியாளர் சிவகார்த்திகேயனுக்கு மது மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கங்கள் இல்லை என்பதை கூறியிருந்தார்.

மேலும் குடி, சிகரெட் பிடிக்காதவர்கள் உத்தமன் என்று சொல்ல முடியாது என பயில்வான் கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயம் பாடி டிமாண்ட் பற்றியது. ஆகையால் சிவகார்த்திகேயனை மட்டும் தப்பு சொல்ல முடியாது. அவர் என்ன பலவந்தப்படுத்தினாரா, இருவரின் விருப்பம் இருந்தால் மட்டுமே இது நடந்திருக்க கூடும்.

இவ்வளவு நாள் அமைதியாக இருந்த இமான் திடீரென இப்படி சொல்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போதாக்குறைக்கு இமானின் மனைவி மோனிகா எங்களின் விவாகரத்தின் போது சமாதானப்படுத்த முயற்சித்தது சிவகார்த்திகேயன் தான். அவர் மீது இப்படி பழி போடுவதா என்று கேட்டிருக்கிறார்.

இந்த பிரச்சனையை என்னால் வெளிப்படையாக பேச முடியாது. கமல் மற்றும் கௌதமி இருவரும் ஒன்றாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். அந்த சமயத்தில் தன்னுடைய மகளின் பாதுகாப்புக்காக கமலை விட்டு பிரிவதாக கௌதமி கூறியிருந்தார். அதேபோல் தான் இந்த சம்பவமும் என பயில்வான் கூறி இருக்கிறார்.

மேலும் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டது தனுஷ் தான். தனுஷை வைத்து அவரது மனைவி ஐஸ்வர்யா படம் எடுத்தார். சிவகார்த்திகேயனுக்கு படம் கொடுத்ததால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே பிரச்சனை வந்திருக்கிறது. மேலும் இப்போது வெளியாகியிருக்கும் சிவகார்த்திகேயன் விஷயமும் ஏற்கனவே அரசல் புரசலாக வெளியான நிலையில் இமானே சொல்லியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News