விஷாலுக்கு கட்டம் சரியில்ல, நாசமா போனது தான் மிச்சம்.. வெளுத்து வாங்கிய பயில்வான்

நடிகர் மற்றும் பத்திரிகையாளரும் ஆன பயில்வான் ரங்கநாதன் வாயில் சிக்காதவர்கள் சொற்ப பெயர்தான். சினிமாவில் உள்ள முக்கால்வாசி பிரபலங்களைப் பற்றி பயில்வான் விமர்சித்துள்ளார். இதனால் பல பிரச்சனைகள் சந்தித்தாலும் தற்போது வரை நடிகர், நடிகைகளை விமர்சிப்பதை பயில்வான் விட்ட பாடு இல்லை.

இப்போது நடிகர் சங்க தலைவர் மற்றும் நடிகருமான விஷாலை பயில்வான் வச்சி செய்துள்ளார். அதாவது சமீபத்தில் மயில்சாமி, மனோபாலா, டி பி கஜேந்திரன் ஆகியோருக்கு நடிகர் சங்கம் அஞ்சலி செலுத்தி இருந்தது. இதில் பேசிய மன்சூர் அலிகான் அப்போது நடிகர் சங்கம் துருப்புடிச்சி போய்விட்டதாக விமர்சனம் செய்திருந்தார்.

Also Read : காணாமல் போன விஷால் பட நடிகை.. செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால் ஏற்பட்ட பரபரப்பு

இந்நிலையில் பயில்வான் பேசுகையில் சின்ன கலைவாணர் விவேக் தமிழ் சினிமாவில் முக்கியமானவர். அவருக்கு நடிகர் சங்கம் அஞ்சலி செலுத்தவில்லை. அதேபோல் தற்போது மயில்சாமி, மனோபாலா, டிபி கஜேந்திரன் மூவருக்கும் சேர்த்து ஒரு அஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சினிமா பிரபலங்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை.

அந்த விழாவே வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் நடிகர் கார்த்தி மட்டும் வந்து இறந்த பிரபலங்களின் குடும்பத்திற்கு உதவி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் இவர்கள் வைத்திருக்கும் அறக்கட்டளை மூலமாகவே நிறைய குழந்தைகளை படிக்க வைக்கலாம். மேலும் நடிகர் சங்கம் இப்படி குட்டிச்சுவர் ஆக போனதற்கு காரணம் விஷால் தான்.

Also Read : ஆண்டவன் மேல பாரத்தை போட்டு மாஸ் நடிகரை நம்பும் விஷால்.. வாழ்வா சாவா போராட்டத்தில் வெளிவரும் படம்

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் தாலி கட்டுவேன் என்று சொன்னார். ஆனால் இப்போதைக்கு அது நடக்காது போல, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்தும் நாசமாக போனதற்கு விஷால் மட்டுமே காரணம். மேலும் இப்போதைக்கு 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரெண்டு படத்திற்கு உள்ள தொகையை கொடுத்தாலே கட்டிடத்தை கட்டி முடித்திடலாம்.

ஆனால் இடது கை வலது கைக்கு தெரியாதது போல அஜித் நடிகர் சங்கத்திற்கு நிறைய உதவி செய்திருந்தார். மேலும் ஐசரி கணேஷ் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க பல முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக அவர் தயாரிக்கும் படத்திலும் விஷால் நடிக்க வைத்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் கட்டிடம் கட்டலாம் என திட்டமிட்டு இருந்தனர். அதையும் விஷால் சுக்குநூறாக்கிவிட்டார் என வெளுத்து வாங்கி உள்ளார் பயில்வான்.

Also Read : வடிவேலுவினால் சீரழிந்த 6 நடிகைகளின் வாழ்க்கை.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை