உண்மையான சம்பவங்களை எடுத்த தரமான 6 படங்கள்.. இந்தியாவே திரும்பி பார்த்த படங்களின் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் உண்மை கதை மற்றும் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்த படங்களின் வரிசை நிறைய உள்ளது. அதில் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று விருதுகளை தட்டிச் சென்ற படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.

விசாரணை:

visaranai-full-movie-online
visaranai-full-movie-online

வெற்றிமாறனின் மாறுபட்ட இயக்கத்தில், தனுஷின் தயாரிப்பில் வெளிவந்தது விசாரணை. இந்த படம் ‘Lockup’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இது நிஜமாக நடந்த நிகழ்வு, இந்தப் படத்தில் தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ் ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்.

நாலு விசாரணை கைதிகளை போலீசார் பொய் வழக்கு போட்டு என்கவுண்டர் செய்யும் வித்தியாசமான சஸ்பென்ஸ் கலந்த, திரில்லர் படம். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல விருதுகளை பெற்றது. தனுஷ் தயாரிப்பில் கிட்டத்தட்ட 1.5 கோடி செலவு செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீசில் 17 கோடிவரை வசூலித்தது.

வழக்கு எண் 18 / 9:

vazhakku-en-18-9-full-movie-online
vazhakku-en-18-9-full-movie-online

மே 2012 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையில் வெளியான படம் வழக்கு எண் 18 / 9. அதே நாளில் ஆந்திராவில் தெலுங்கு ரீமேக்கில் வெளியிடப்பட்டது. பல அவார்டுகளை தட்டிச் சென்றது, இந்த படத்தில் ஸ்ரீ, மிதுன் முரளி, உர்மிலா,மனிஷா போன்ற பிரபலங்கள் நடித்து உள்ளனர். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உண்மையான கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதுதான் வழக்கு எண் 18 / 9.

ரோட்டோரமாக டீக்கடையில் வேலை பார்க்கும் ஸ்ரீ, உர்மிலாவை காதலிக்கிறார், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரீ பொய்யான வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்தபடியே உர்மிலாவிடம் காதலை வெளிப்படுத்துகிறார். இதுவும் ஒரு சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த படம் தான்.

தீரன் அதிகாரம் ஒன்று:

H.வினோத் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் தீரன் அதிகாரம் ஒன்று. கார்த்திக், ரகுல் பிரீத் சிங் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் கட்டில் 70 கோடி வரை வசூல் செய்தது.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் ஃபிலிம்பேர் விருதுகளை தட்டி சென்றார். போலீஸ் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்து எப்படி ஒரு முரட்டுத்தனமான குற்றவாளியை பிடிக்கிறார். மீண்டும் வயதான பின் போலீசின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை என்ற உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, இந்த படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

ஹரிதாஸ்: 2013ம் ஆண்டு கிஷோர், சினேகா, பிரித்திவிராஜ், சூரி போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்தது ஹரிதாஸ். இந்த படத்தை ராமதாஸ் என்பவர் இயக்கி இருப்பார் உண்மை கதையை மையப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்து இருப்பார், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய என்று கூறலாம். இந்த படம் சென்னை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெளில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றது.

நடுநிசி நாய்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்தது நடுநிசி நாய்கள். இந்த படத்தில் வீரா, சமீராரெட்டி, தேவா, அஸ்வின் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 2011 ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் கிட்டத்தட்ட 3.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

நான் மகான் அல்ல: 2010ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்திக், காஜல் அகர்வால், ஜெயப்பிரகாஷ், சூரி போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல. யுவன் சங்கர் ராஜா இசையில் இன்றளவும் பாடல்கள் ரசிக்க கூடியதாக இருந்தது. விஜய் சேதுபதி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த கார்த்திக் ஒரு கேங்ஸ்டரிடம் மாற்றிக்கொண்டு எப்படி தப்பித்து வெளியே வருகிறார் என்பதுதான் முழு கதை.

இப்படி தமிழ் சினிமாவில் உண்மை கதையை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்துள்ளது. இதில் ரசிகர்களிடம் இன்றளவும் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டிய படங்களின் பதிவுகளை மேலே கொடுத்துள்ளோம், மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த லாக் டவுன் சமயத்தில் நேரத்தை செலவிடுங்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்