ஆணவத்தின் உச்சத்திற்கே சென்ற பங்களாதேஷ் அணி.. தட்டிக் கேட்காததால் கீழ்த்தனமாய் மாறும் கிரிக்கெட்

Bad behavior from Srilanka and Bangladesh: இன்று வரை பங்களாதேஷ் அணி வளர முடியாமல் போனதற்கு அவர்களின் மோசமான நன்னடத்தையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. எப்பொழுதுமே இவர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்ற அணிகளை எரிச்சல் ஊட்டும் வகையில் இருக்கும்.

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இரு அணிகளுமே கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதியே இல்லாதது போல் மிகவும் கீழ்த்தனமாக நடந்து கொண்டது. பங்களாதேஷ் அணிக்கு இது புதியது இல்லை என்றாலும், இலங்கை அணி இப்படி மோசமாய் நடந்து கொண்டது புதிதாக இருந்தது.

தற்போது இந்த இரு அணிகளுமே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் 20 ஓவர் போட்டி தொடரை இலங்கை அணியும், ஒரு நாள் போட்டி தொடரை பங்களாதேஷ் அணியும் கைப்பற்றியது. இப்பொழுது இரு அணிகளும் பெற்ற இந்த வெற்றி தான் கடும் பேசு பொருளாகி வருகிறது.

தட்டிக் கேட்காததால் கீழ்த்தனமாய் மாறும் கிரிக்கெட்

ஏற்கனவே உலக கோப்பையில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மத்தியூசை டைம் அவுட் முறையில் வெளியேற்றினார்கள் பங்களாதேஷ் அணியினர். இப்படி முதல் முதலாக இன்டர்நேஷனல் போட்டிகளில் டைம் அவுட் அவுட் ஆன முதல் வீரர் மேத்யூஸ் தான்.

மேத்யூஸ் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பழுது ஏற்பட்டதால் அவர் லேட்டாக வந்தார் என்று அம்பையரிடம் வாக்குவாதம் செய்தும் அவுட் கொடுத்து விட்டனர். இதனை சித்தரிக்கும் விதமாக நடந்து முடிந்த பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் கோப்பையை வென்றபின் இலங்கை அணியினர் அனைவரும் வாட்சைக் கை காமித்து பங்களாதேஷ் அணியை கிண்டல் செய்தனர்.

இது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் போட்டி தொடரை வென்று விட்டு பங்களாதேஷ் அணி இலங்கை அணியை வம்பு இழுக்கும்படி உடைந்த ஹெல்மெட்டை காட்டி அனைவரும் போஸ் கொடுத்தனர். அதில் இருக்கும் பழுதை சுட்டிக்காட்டிய படி அந்த அணியின் கேப்டன் ரஹீம் இலங்கை அணியை வெறுப்பேற்றினார். இப்படி ஐசிசி எதையும் கண்டுகொண்டாமல் இருப்பது கிரிக்கெட்டின் கலாச்சாரத்தை சீரழிக்கிறது.

Next Story

- Advertisement -