ஷோபாவின் மரணத்திற்கு காரணமான 3 விஷயங்கள்.. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்த பாலு மகேந்திரா

கருப்பு நிறமும், ஒல்லியான உடல்வாகும் என ஹீரோயினுக்கான லட்சணம் இல்லாத ஒருவர் புகழின் உச்சியில் இருக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு உதாரணமாக நாம் நடிகை ஷோபாவை சொல்லலாம். ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பும், குழந்தைத்தனமான முகமும் என அவர் இன்று வரை தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக இருக்கிறார்.

குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்த இந்த நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தது இன்று வரை யாராலும் நம்ப முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. அவருடைய இழப்பை எண்ணி வருந்தாத ரசிகர்களை இருக்க முடியாது. அந்த அளவுக்கு அனைவரையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டுச் சென்ற அவருடைய மரணத்திற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கிறது.

Also read: பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் எடுக்க எவ்வளவு நாளாச்சு தெரியுமா?. ப்ரோமோஷனலில் போட்டு உடைத்த வந்தியத்தேவன்

அதாவது அவர் பாலுமகேந்திராவை ரகசிய திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும். அதுதான் அவருடைய மரணத்திற்கு முதல் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் தன்னுடைய திருமணத்தை ஊரறிய நடத்த வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை ஒரு ஆசைநாயகியாக மட்டுமே பார்த்த இயக்குனருக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து இரண்டாவதாக ஒரு பெரிய காரணம் இருக்கிறது. அதாவது திருமணம் செய்து கொண்ட ஷோபாவை ஒரு தனி வீட்டில் தங்க வைத்துவிட்டு பாலு மகேந்திரா தன் முதல் மனைவியுடன் தான் இருந்தாராம். இது அவரை மனதளவில் விரக்தி அடைய செய்திருக்கிறது. அதை தொடர்ந்து அவர் சம்பாதிக்கும் பணம் யாருக்கு சொந்தம் என்ற போட்டியும் இருந்திருக்கிறது.

Also read: விடுதலை பார்ட்-2க்கு பின் மீண்டும் இணையும் வெற்றிமாறன்-சூரி காம்போ.. அதுலயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு

இது போன்ற காரணங்கள் தான் அவரை தவறான முடிவு எடுக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் அவருடைய மரணத்திற்கு பாலு மகேந்திரா தான் காரணம் என்று அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் அவருக்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தது. அதனால் பயந்து போன அவர் பெரும்புள்ளி ஒருவரிடம் அடைக்கலமானார்.

அவருடைய ஆதரவு இருந்ததால் இந்த வழக்கும் அப்படியே முடித்து வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த வழக்கில் நியாயம் கிடைப்பதற்காக போராடிய ஷோபாவின் அம்மாவும் தற்கொலை செய்து கொண்டார். அந்த வகையில் சட்டத்தின் பிடியிலிருந்து பாலு மகேந்திரா சுலபமாக தப்பித்தது பலருக்கும் தெரியும். ஆனால் பெரிய இடத்தை பகைத்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை. அதன் காரணமாகவே இந்த செய்தியும் பத்தோடு பதினொன்றாக முடிந்து போனது.

Also read: சோடை போனதால் கொடுக்கிற சம்பளத்தை வாங்கி நடிக்கும் பரிதாபம்.. மறுபடியும் ஹரி கூட்டணியில் விஷால்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்