பிக் பாஸை காட்டிக்கொடுத்த பாலாஜி முருகதாஸ் வீடியோ.. உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

தமிழ் சின்னத்திரையில் வருடாவருடம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண்பதற்கு என்று தனிக் கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் காரணமாக வருடாவருடம் பிக் பாஸ் ரசிகர்களின் எண்ணிக்கை ஏகபோகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதேபோல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கோலாகலமாக முடிவடைந்தது. நான்கு சீசன் முடிவடைந்தும் இன்றுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் குரலில் பேசுவது யார் என்ற குழப்பமும், மர்மமும் பலரிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்பது யார் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளதாம். கடந்த சீசனில் லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் ஒரு புகைப்படம் அனுப்பி வைத்திருந்தத போதுகூட, பிக் பாஸ் இன் முகம் அதில் தெளிவாக இல்லை. ஆனாலும் அந்த புகைப்படத்தின் பிக் பாஸ் ஒரு இளமையான நபர் போல தோற்றம் கொண்டிருந்தார்.

இப்படி ஒரு நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் ஸ்வாரஸ்யமான போட்டியாளராக திகழ்ந்த பாலாஜி முருகதாஸ், தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஷயம் ஒன்றை செய்து உள்ளார். ஏனென்றால் இதுவரை பிக் பாஸ் யார் என்று குழம்பி வந்த ரசிகர்களுக்கு தற்போது பாலாஜி இவர்தான் என்பதை மறைமுகமாக தெளிவுபடுத்திஉள்ளார்.

மேலும் பிக் பாஸ் குரலுக்கு உண்மையான சொந்தக்காரர் பெயர் சச்சிதானந்தம் என்றும், இவர் தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல், இவர் பாலிவுட் வரை வேலை செய்து உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், சச்சிதானந்தம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் குரலில் பேசி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலர் ‘நீங்கதான் பிக் பாஸா’ என்று கேள்வி கேட்பதோடு, இந்த தகவலை இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாலாஜி இந்த வீடியோவிற்கு ‘என்ன அண்ணா, எப்படி இருக்கீங்க?’ என்று கமெண்ட் செய்து இருந்ததால், இவர்தான் பிக்பாஸ் என்று ஆணித்தரமாக கமெண்ட்டுகளை அள்ளி வீசுகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

bigg-boss-4
bigg-boss-4

பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் பேசிய வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்