21 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக அனல் பறக்க ட்விட்டை தட்டிய பாலா.. யாருக்குனு தெரிஞ்ச ஷாக் ஆயிடுவீங்க!

தமிழ் திரை உலகில் முக்கிய இயக்குனராக இருப்பவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

1999 ஆம் ஆண்டு விக்ரமை வைத்து சேது எனும் படத்தை இயக்கிய பெரிய வரவேற்பைப் பெற்று தேசிய விருது வாங்கி தனது திறமையை உலகிற்கு எடுத்துக் காட்டினார்.

தன்னுடைய முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியது மட்டுமில்லாமல் பல நடிகர்களும் தேசிய விருது வாங்குவதற்கு காரணமாக இருந்தார் பாலா. அதனாலேயே பல நடிகர்கள் இவரது படத்தில் நடிப்பதற்கு தவமாய் தவமிருந்து காத்திருந்தனர்.

விக்ரமின் வாழ்க்கைக்கு எப்படி ஒரு திருப்புமுனையாக இருந்தாரோ அதேபோல் சூர்யாவின் வாழ்க்கையிலும் நந்தா என்ற படத்தின் மூலம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தார் பாலா.

bala-twit
bala-twit

பல வருடமாக சினிமாவில் இருக்கும் இயக்குனர் பாலா இதுவரை எந்த ஒரு சமூக வலைதள பக்கம் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது முதலமைச்சராக பதவியேற்ற மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார்.

திருக்குறளை மையமாக வைத்து முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் உங்களது நடவடிக்கைக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்