என்னோட ஆட்டத்தை இனிமேதான் பார்க்க போறீங்க.. OTTக்காக ராவா களமிறங்கும் பாலா!

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்காக மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில இயக்குனர்களுக்காகவே படம் பார்க்க தியேட்டருக்கு ரசிகர் கூட்டம் கூடும். அந்த வகையில் பாலா படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு.

ஒவ்வொரு பாலா பட வெளியீட்டின் போதும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கூட்டம் கூட்டமாக தியேட்டரை நோக்கி படையெடுக்கும் பாலாவின் ரசிகர்கள் சமீபகாலமாக விரக்தியில் உள்ளனர்.

பாலாவின் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு எந்த ஒரு படமும் வெளிவரவில்லை என சோகத்தில் உள்ளனர். பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்கள் வசூல் ரீதியாக சறுக்கல்களை சந்தித்து.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் பாலாவுக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளது. இதன் காரணமாக எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை எடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் பாலா.

bala-cinemapettai-01
bala-cinemapettai-01

இதனால் பிதாமகன், சேது சமயத்தில் எடுத்த படங்களை போல ராவாக ஒரு படம் எடுக்க உள்ளாராம். இதற்காக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பாலாவுக்கு மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சும்மாவே பாலா படங்களில் கெட்ட வார்த்தை, கஞ்சா, போதை போன்ற பல விஷயங்கள் இடம்பெறும். இப்போது OTTயில் எந்த வித கட்டுப்பாடும் இல்லை என்பதால் கண்டிப்பாக பாலா படம் ராவா இருக்கும் என இப்போதே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவுக்கு புதிதாக வந்த நண்டு சிண்டுகள் எல்லாம் மிகப் பெரிய இயக்குனராக வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா? என பாலா களமிறங்கியுள்ளது பாலா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மகிழ்மதியே உயிர்கொள் மொமன்ட் தான்!

- Advertisement -