தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் பாலா.. ஆர்யாவை தொடர்ந்து மாட்டிக் கொண்ட சூர்யா

இயக்குனர் பாலா ஒரு திரைப்படம் எடுக்கிறார் என்றாலே அந்த திரைப்படத்திற்கு விருது நிச்சயம் கிடைக்கும். அந்த அளவுக்கு அவருடைய திரை கதையும், கதாபாத்திரங்களும் எதார்த்தமாகவும், ரசிகர்கள் ரசிக்கும் வகையிலும் இருக்கும் இதுதான் அவருடைய வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது.

ஆனால் அத்தகைய வெற்றியை பெறுவதற்கு அவர் என்னவெல்லாம் செய்வார் என்பது திரைலகினர் மட்டுமல்ல ரசிகர்களும் அறிந்த கதை தான். ஏனென்றால் பாலா சரியான டார்ச்சர் பேர்வழி. தான் மனதில் நினைத்த காட்சி சரியாக வரும் வரையில் சம்பந்தப்பட்ட நடிகர்களை விடவே மாட்டார்.

Also read:கேவலமாக நடந்து கொண்ட பாலா.. ஆவேசப்பட்டு உண்மையை உடைத்த பிரபலம்

இவர் படத்தில் நடிக்க வந்து படாத பாடுபட்ட நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் நான் கடவுள் திரைப்படத்தை இயக்கும் போது நடிகர் ஆர்யாவுக்கு ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அந்த சமயத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த ஆர்யா இந்த படத்தின் மூலம் முன்னணி அந்தஸ்தை பிடித்து விடுவதற்காக கடுமையாக உழைத்தார்.

அதற்காக அவர் அனுபவித்த கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த படத்திற்காக ஆர்யா பல வருடங்கள் கஷ்டப்பட்டார். அவர் வேறு எந்த திரைப்படத்திலும் கமிட்டாக முடியாத அளவுக்கு மொத்த கால்ஷூட்டையும் பாலாவே வாங்கி இருக்கிறார். மேலும் பல காட்சிகளை திரும்பத் திரும்ப எடுத்து ஆர்யாவை ஒரு வழி செய்திருக்கிறார்.

Also read:ஹரி விளையாடி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. முக்கிட்டு எடுத்த 3வது பார்ட் என்னாச்சு தெரியுமா?

அந்தப் படம் முடிந்த பிறகு அவர் விட்டால் போதும் என்று கும்பிடு போட்டு வந்திருக்கிறார். தற்போது அப்படி ஒரு சூழலில் தான் சூர்யா மாட்டிக்கொண்டு இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த இதன் படப்பிடிப்பு தற்போது சில பல பிரச்சனைகளின் காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது பாலா ஒரே காட்சியை மூன்று நாட்கள் தொடர்ந்து எடுத்திருக்கிறார். அதற்கு சூர்யாவும் பொறுமையாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகும் கூட பாலா இதே போன்று காட்சிகளை திரும்பத் திரும்ப எடுத்திருக்கிறார். இதனால் பொறுமை இழந்த சூர்யா கோபப்பட்டு படத்தில் நடிக்காமல் வெளியேறி இருக்கிறார். இதுதான் தற்போது வணங்கான் திரைப்படத்தின் நிலைமை. சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்ற கண்டிசனோடு நடிக்க வந்த சூர்யா தற்போது பாலாவின் டார்ச்சரால் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறார்.

Also read:ஆர்யாவுக்கு மோசமான பெயரை வாங்கி கொடுத்த 5 படங்கள்.. கஷ்டப்பட்டு நடிச்சும் பிரயோஜனம் இல்லை

- Advertisement -