கேட்டதை கொட்டி கொடுத்த பாலா.. பல நாளாகியும் மதிக்காத சூர்யா.!

சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களை கொடுத்தவர் பாலா. ஆனாலும் தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் எட்ட முடியாத உயரத்தை அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி தனது சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் சூர்யா, பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் பாலா மற்றும் சூர்யா இடையே ஏதோ மனகசப்பு ஏற்பட்டதாகவும், கதையில் ஹீரோவுக்கு திருப்தி இல்லை எனவும் கூறப்படுகிறது.

Also Read : எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கும் கமல்.. ஹேண்டில் பண்ண முடியாமல் வெறுத்த பாலா

எப்போதுமே ஹீரோக்களை பாடாய்படுத்தும் பாலா இப்போது வேறு வழியில்லாமல் அமைதியாக சென்று கதையை தயார் செய்து வருகிறாராம். அதுமட்டுமின்றி கதையை தனியாக எழுதும் பாலா இப்போது சூர்யாவுக்காக உதவி இயக்குனர்களை வைத்த இரண்டு கதைகளை ரெடி செய்துள்ளார்.

அந்தக் கதைகளை சூர்யாவுக்கும் பாலா அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் சூர்யாவிடம் இருந்து இந்த கதைக்கு எந்த பதிலும் வரவில்லையாம். ஆனால் தற்போது வரை சூர்யாவுக்காக பாலா காத்துக் கொண்டிருக்கிறாராம்.

Also Read : சூர்யாவுடன் இருக்கும் பிரச்சனையை பொது இடத்தில் உறுதிசெய்த பாலா.. வணங்கான் பட நிலைமை இதுதான்!

பாலா இது போன்று எந்த விஷயத்திலும் இவ்வளவு பொறுமையாக போனதில்லை. ஆனால் சூர்யா விஷயத்தில் மிகப் பொறுமையாகவும் மௌனம் காத்தும் வருகிறார். இதற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.

அதாவது இந்த படம் மட்டுமே பாலாவின் எதிர்காலம் என்பதாலும், இந்த படத்தை முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தில் ஒப்பந்தமாக முடியும் என்பதால் பாலா அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இதுதான் சரியான நேரம் என சூர்யா பழிவாங்குகிறார் என கூறப்படுகிறது.

Also Read : பாலா இல்லைனா இந்த படம் வெற்றி அடைந்திருக்காது.. அந்தர் பல்ட்டி அடித்த 22 வயது நடிகை

- Advertisement -