பாலாவுக்கு 108 பேரின் இடுப்பு எலும்பை மாலையாக செய்து கொடுத்த அகோரி.. என்னங்க சொல்றீங்க!

தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பாலா. பாலா படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு என்பது இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பாலாவின் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வரிசையாக படங்களில் தொடர்ந்து நடிக்க முன்னணி இயக்குனராக உயர்ந்தார். ஆனால் அதன் பிறகு பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் மற்றும் பரதேசி போன்ற படங்கள் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை.

அதே கதை தான் கடைசியாக வெளிவந்த தாரை தப்பட்டை மற்றும் நாச்சியார் போன்ற படங்களுக்கும் நடந்தது. இருந்தாலும் பாலா ஏதாவது புதுமையாக செய்வார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் நடிகரான சூர்யா உடன் புதிய கூட்டணி அமைக்க உள்ளாராம் பாலா. கிட்டத்தட்ட 18 வருடம் கழித்து இந்த கூட்டணி இணைய உள்ளது. கடைசியாக பாலா மற்றும் சூர்யா இணைந்து பிதாமகன் என்ற படத்தில் பணியாற்றிய இருந்தனர்.

பாலா எப்போதுமே தன்னுடைய கழுத்தில் ஒரு குறிப்பிட்ட வித்தியாசமான மாலை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுபற்றி பிரபல சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் அதை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா அவரிடம் கேட்டார்.

அதற்கு பாலா, காசியில் 108 பேரின் இடுப்பு எலும்பை எடுத்து கொஞ்சம்கொஞ்சமாக செதுக்கி அதில் மாலையாக செய்து ஒரு அகோரி தனக்கு பரிசளித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு பெரிய விஷயத்தை அசால்டாக சொல்கிறாரே என நடிகை சங்கீதா ஒரு நிமிடம் ஆடிப் போனார். பாலாவின் நான் கடவுள் திரைப்படம் காசியில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

bala-cinemapettai
bala-cinemapettai

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -