எனக்கு விஜய் சேதுபதி வேண்டாம், நீ போதும்.. வில்லன் நடிகரை சொந்த செலவில் ஹீரோவாக்கிய பாலா

ஒரு காலத்தில் சேது, பிதாமகன், நந்தா, நான் கடவுள் என பயங்கரமான வெற்றிப்படங்களை கொடுத்த பாலா சமீபகாலமாக ஒரு வெற்றி கொடுக்கவே தடுமாறும் அவலம் கோலிவுட் சினிமாவில் நடந்து வருகிறது.

நடிகர்களையும் தாண்டி ஒரு சில இயக்குனர்களுக்கு மட்டும் தான் அவர்களது படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்க்காமல் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பாலா. அவன் இவன், பரதேசி போன்ற படங்கள் பாலாவின் இன்னொரு பரிமாணத்தை காட்டி அவருக்கு பாராட்டையும் பெயரையும் கொடுத்தது. ஆனால் தாரை தப்பட்டை என்ற படத்தின் மூலம் தான் அவருக்கு தோல்வி முகம் தொடர ஆரம்பித்தது.

சசிகுமார் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றதால் அதனைத் தொடர்ந்து வெளியான நாச்சியார், வர்மா போன்ற படங்கள் பாலாவின் தரம் இல்லை என ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டது.

பாலா இயக்குனரையும் தாண்டி தயாரிப்பாளராகவும் நல்ல நல்ல படங்களை தயாரித்துள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஜோசப் என்ற படத்தை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

முதலில் இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் பலராலும் பரிந்துரை செய்யப்பட்டாராம். ஆனால் பாலாவோ வில்லன் நடிகர் ஆர்கே சுரேஷை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளார். கதைக்கு தேவையான சரியான ஹீரோ நீதான் என அவரை வைத்து படம் எடுத்துவிட்டார். விசித்திரன் படத்தின் டீசர் கூட வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Visithiran-cinemapettai
Visithiran-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்