தம்பிகளா! அடுத்த படத்துல ஹீரோ நீங்க ரெண்டு பேரும் தான்.. அண்ணன் தம்பியை ஒன்றாக இணைத்த பாலா

எந்த நேரத்தில் பாலா வர்மா என்ற படத்தை எடுத்தாரோ அதன் பிறகு இனி எனக்கு பட வாய்ப்பு வருமா என யோசிக்கும் அளவுக்கு அவரது கேரியர் மாறிவிட்டது. இதன் காரணமாக அடுத்தது ஒரு பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என ராப்பகலாக கதை எழுதி வருகிறார்.

முன்னதாக பாலா அதர்வா, ஜிவி பிரகாஷ், ஆர்யா போன்ற மூவரையும் வைத்து ஒரு படத்தை எடுக்க இருந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது பாலா அந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம்.

பாலா இயக்கத்தில் கடந்த சில வருடங்களில் வெளியான தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் பாலாவின் மார்க்கெட் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்துள்ளது.

இதை அப்படியே விட்டால் சோலி முடிந்துவிடும் என்பதை உணர்ந்துகொண்ட பாலா தற்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் அருள்நிதி ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளனர்.

அருள்நிதி நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலித்துவிடுவார். உதயநிதி ஸ்டாலினும் சமீபகாலமாக ஓரளவு நல்ல படங்களில் நடித்து வருவதாக அவருக்கு பெயர் கிடைத்துள்ளது.

ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து பாலா படத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கப் போகிறார்களே என கோலிவுட் வட்டாரம் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டதாம். ஆனால் பாலாவோ கண்டிப்பாக இந்த படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பேன் என சபதம் எடுத்து கிளம்பிவிட்டாராம்.

udhayanidhi-arulnidhi-cinemapettai
udhayanidhi-arulnidhi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்