பாலாவை கையைப்பிடித்து தூக்கிவிடும் சூர்யா.. தயாரித்து நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் பட்டியலில் இயக்குனர் பாலாவின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ஏனென்றால் இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதை களங்களை கொண்டிருக்கும். கடந்த 1999ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா. அறிமுகமான முதல் படமே தாறுமாறான வெற்றி பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து பாலா இயக்கிய நந்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்த நந்தா படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது. அதேபோல் இப்படத்தில் சூர்யாவின் நடிப்பும் பாராட்டைப் பெற்றது.

சேது மற்றும் நந்தா ஆகிய இரு படங்களின் வெற்றியை தொடர்ந்து இவ்விரு படங்களில் நடித்த இரண்டு கதாநாயகன்களையும் ஒரே படத்தில் பாலா நடிக்க வைத்தார். அப்படம் தான் பிதாமகன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் பாலா வெளிக்கொண்டு வந்தார்.

இவ்வாறு பாலா இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றதோடு பல விருதுகளையும் குவித்து வந்தது. ஆனால் இறுதியாக பாலா இயக்கத்தில் உருவான வர்மா படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. அதேபோல் படமும் படுதோல்வியடைந்தது. இதனால் பாலா எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு வெற்றி படங்களை வழங்கிய இயக்குனருக்கு உதவ வேண்டும் என நினைத்த சூர்யா, பாலா படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, அப்படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். முன்னதாக இப்படத்தில் நாயகனாக நடிகர் அதர்வாவும், நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷூம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

bala-suriya
bala-suriya

அதேசமயம் நடிகர் சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், அதர்வா நடிக்க உள்ள படத்தை பின்னர் பாலா இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்