இயக்குனர் பாலா மற்றும் அஜித் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக முன்பு ஒரு காலத்தில் அறிவிப்பு வெளியானது. எப்போதுமே பாலாவின் படங்களில் ஹீரோவின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும். இதனால் பாலா சொன்னபடியே நீண்ட தலைமுடி, தாடியை வளர்த்துள்ளார் அஜித்.
ஆனால் சிறிது நாட்களில் இப்படத்திற்கு ஆர்யா தேர்வாகியுள்ளார் என பாலா அஜித்திடம் கூறியுள்ளார். அதாவது நான் கடவுள் படத்திற்கு தான் முதலில் பாலா அஜித்தை அணுகியுள்ளார். இதற்காக அஜித்துக்கு தயாரிப்பாளரிடம் இருந்து ஒரு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித் மற்றும் பாலா ஹோட்டலில் இது குறித்து பேசியுள்ளனர். அப்போது பைனான்சியர் அன்புச்செழியன், பி எல் தேனப்பன், அருள்பதி ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில் அப்போது இந்தப் பேச்சுவார்த்தையின் போது அஜித்தை தாக்கியதாக ஊடகங்களில் செய்தி பரவியது.
அதாவது அஜித் வாங்கிய தொகைக்கு வட்டியுடன் பணத்தை தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அஜித் இந்த படத்தில் இருந்து ஒதுங்கவில்லை. படக்குழு தான் அஜித் வேண்டாம் என்று அவரை நிராகரித்துள்ளது. இதனால் கொடுத்த பணத்தை மட்டுமே திருப்பி கொடுப்பேன் என அஜித் தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பேச்சுவார்த்தை முற்றிய நிலையில் இன்றே பணத்தை தருகிறேன் என்று கூறிவிட்டு அஜித் சென்றுள்ளார். அதேபோல் கொடுத்த வார்த்தையை மீறாமல் சொன்னபடி அஜித் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அங்கு கைகலப்பு எதுவும் நடக்கவில்லை என்பதை பாலா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால் எங்களுக்குள் பிரச்சினை இருந்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் மதுரை அன்பு செழியன் தான் என்ற பேச்சுக்கள் அப்போது வெளியானது. இவர்தான் பல தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். தற்போது அவரது வீடு மற்றும் நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடக்கிறது.