6 மாதத்தில் குழந்தை பெற்ற பாலா பட வில்லன்.. சீரியல் நடிகையை கழட்டிவிட்டு வேறு பெண்ணுடன் ரகசிய திருமணம்

பாலா மற்றும் விஷால் படங்களில் வில்லன் நடிகராக நடித்த ஒருவர் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டு ஏப்ரல் மாதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதுதான் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாலாவின் தாரை தப்பட்டை மற்றும் விஷாலின் மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் தான் ஆர்கே சுரேஷ். இவர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

இவருக்கும் சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதன்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2020ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் மது என்பவரை ஆர்கே சுரேஷ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் வெறும் 15 பேர் மட்டும்தான் கலந்து கொண்டார்களாம்.

அந்த திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே அந்த திருமணத்தின் பதிவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஆர்கே சுரேஷ் குழந்தை பிறந்ததை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதுவே தற்போது பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டு ஏப்ரல் மாதத்தில் குழந்தையை பெற்று விட்டார்களே என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பே இருவருக்கும் உறவு இருந்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக திருமணத்திற்கு முன்பே மது கருவுற்றிருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். இல்லை திருமணம் செய்து கொண்டதையே லேட்டாதான் அறிவித்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

rk-suresh-with-his-baby-girl
rk-suresh-with-his-baby-girl
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்