சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கௌதமி, விஜய் யேசுதாஸ் போல நாசமா போன வாழ்க்கை.. இமான் மூடி மறைத்ததை அம்பலப்படுத்திய பயில்வான்

Imman-Bailwan Ranganathan: மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய பயில்வான் அதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். ஆனாலும் அவர் பிரபலங்கள் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்தி தான் வருகிறார். அதில் தற்போது மீடியாவில் பரபரப்பை கிளப்பி வரும் சிவகார்த்திகேயன், இமான் விவகாரம் பற்றிய விஷயத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

அதிலும் இவருடைய ஃபேவரைட் வார்த்தையான பாடி டிமாண்ட் சிவகார்த்திகேயனுக்கும் உண்டு என்று அவர் கூறியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது. ஏற்கனவே இதைப்பற்றிய பேச்சுதான் இப்போது சலசலக்கப்பட்டு வருகிறது. அதில் பயில்வானும் தன் பங்குக்கு தீயை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் விசயத்தில் உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்லி சொல்லியே வெளிப்படையாகவே பல விஷயங்களை அவர் கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக இரு பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்களையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். அதன்படி கௌதமி கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் பிரிவு என்ற முடிவை அவர் எடுத்தது தன்னுடைய மகளின் பாதுகாப்பிற்காகத்தான். அது மட்டுமின்றி கமல் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததும் அவரை இந்த முடிவு எடுக்க தூண்டி இருக்கிறது. அதேபோன்றுதான் பாடகர் விஜய் யேசுதாஸ் மனைவியும் வேறு ஒரு பிரபலத்துடன் உறவில் இருந்த விவகாரமும் பரபரப்பை கிளப்பியது.

இதைப் பற்றி கூறியிருக்கும் பயில்வான் அப்படி ஒரு சம்பவத்தினால் தான் தற்போது இமான் வாழ்க்கையும் நாசமாக போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் உண்மை என்ன என்று அவர் வெளிப்படையாக தெரிவிக்காததால் சிவகார்த்திகேயன் இதற்காக மான நஷ்ட வழக்கு போட முடியாது என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் பலவந்தப்படுத்தவில்லை என்ற ஒரு விஷயத்தையும் கூறி தற்போது கிசுகிசுக்கப்பட்டு வரும் விஷயம் உண்மைதான் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். இப்படியாக இமான் எந்த விஷயம் தெரியக்கூடாது என்று மூடி மறைத்து பேசினாரோ அதை அப்படியே ஓப்பன் செய்து இருக்கிறார் பயில்வான். இதன் மூலம் சிவகார்த்திகேயனின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறி இருக்கிறது.

- Advertisement -

Trending News