கமல் நண்பராக இருந்தும் ரஜினிக்கு பிடிக்காத லிப்லாக் சீன்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பயில்வான்

kamal-Rajini: உலக நாயகன் என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது முத்த காட்சிதான். அந்த அளவுக்கு அவருடைய படங்களில் இந்த காட்சி கட்டாயமாக இருக்கும் என்பது ஊர் உலகத்திற்கே தெரியும். ஆனால் அவருடைய நண்பராக இருந்தும் ரஜினி இதுவரை ஒரு லிப்லாக் காட்சியில் கூட நடித்தது கிடையாது.

ஜெயிலர் வரை 169 படங்களில் நடித்து முடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயின்களுடன் கொஞ்சம் நெருக்கமாக நடித்திருந்தாலும் லிப்லாக் காட்சிகளில் நடித்தது கிடையாது. அது ஏன் என்பதற்கான காரணத்தை இப்போது பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

Also read: கமலுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த முப்பெரும் தேவியர்கள்.. 5 மடங்கு நெருக்கத்தை ஒரே படத்தில் காட்டிய நடிகை

இத்தனை நாள் சூப்பர் ஸ்டார் இது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறாரா, இல்லையா என்ற ஆராய்ச்சியில் யாரும் இறங்கியது கிடையாது. ஆனால் பயில்வான் கூறிய பிறகு அட ஆமால்ல சூப்பர் ஸ்டார் இப்படி நடிச்சதே கிடையாதே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுகிறது.

அதைப்பற்றி கூறியிருக்கும் பயில்வான், சூப்பர் ஸ்டார் மக்கள் மத்தியில் கண்ணியமாக நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று விரும்புபவர். அது மட்டுமல்லாமல் அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.

Also read: ரஜினியை விட அதிகமா சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்.. கடன்ல இருந்தும் சூப்பர் ஸ்டார் கூட நடிக்க மறுத்த சம்பவம்

அப்படி இருக்கும் போது இது போன்ற காட்சிகளில் நடித்து மக்களிடம் கெட்ட பெயர் வாங்குவதை அவர் விரும்பவில்லை. அதன் காரணமாகவே இது போன்ற காட்சிகளுக்கெல்லாம் அவர் தடை போட்டு விட்டதாக பயில்வான் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விஷயமாக தான் இருக்கிறது.

ஏனென்றால் தனக்கு பிடித்த ஒரு நடிகர் என்ன செய்கிறாரோ அதை அப்படியே பின்பற்றும் ரசிகர்களும் இருக்கின்றனர். அவ்வளவு ஏன் சூப்பர் ஸ்டார் சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் அந்த ஸ்டைலை செய்து பார்க்காத ரசிகர்களே இருக்க முடியாது. குழந்தைகளும் அதை செய்து பார்த்த கதையும் இருக்கிறது. அதனாலேயே சூப்பர் ஸ்டார் லிப் லாக் விஷயத்தில் இப்படி ஒரு கொள்கையுடன் இருந்திருக்கிறார். இது பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது.

Also read: சஞ்சயை வைத்து அப்பனுக்கு பாடம் சொல்லும் சங்கீதா.. லதா ரஜினிகாந்த் போல் காட்டும் புத்திசாலித்தனம்

- Advertisement -