திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நாலாபக்கமும் வந்த ஆப்பு.. கொஞ்சமும் எதிர்பார்க்காத பயில்வான்

பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக கூறிவருகிறார். இதனால் பல பிரபலங்களும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதற்கும் அசராத பயில்வான் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பயில்வான் ராதிகாவின் அம்மாவைப் பற்றி தவறாக பேசி இருந்ததால் கடற்கரையில் எதர்ச்சியாக பயில்வான் சந்தித்த ராதிகா பல கேள்விகள் கேட்டிருந்தார். இது அப்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தற்போது பார்த்திபன் இரவின் நிழல் படத்தை எடுத்துள்ளார்.

இப்படத்தில் ரேகா நாயர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அவரைப் பற்றியும் பயில்வான் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் பயில்வானை கடற்கரையில் சந்தித்த ரேகா நாயர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்பின்பு சுற்றியிருந்தவர்கள் இவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இவர்கள் பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது. அதன் பின்பும் பயில்வான் தனது யூடியூப் சேனலில் ரேகா நாயரை பற்றி பேசி இருந்தார். அதாவது ரேகா நாயர் திட்டமிட்ட ஒரு யூடியூப் சேனலுகாக இவ்வாறு சதி செய்துள்ளார் என பயில்வான் கூறியிருந்தார்.

இதனால் கோபம் அடைந்த ரேகா நாயர் தன்னைப்பற்றி தேவையில்லாததை பேசுவதாக பயில்வான் மீது புகார் கொடுத்துள்ளார். இதனால் தற்போது பயில்வான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பயில்வான் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் யூடியூப் சேனலில் பேட்டி கொடுப்பதையும் தடை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பல நடிகைகளைப் பற்றி அவதூறாக பேசி வந்த பயில்வானுக்கு தற்போது ரேகா நாயர் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என பலரும் பேசி வருகின்றனர். மேலும் பபயில்வானும் தனக்கு ரேகா நாயர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கும் விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.

- Advertisement -

Trending News