சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மீண்டும் மீண்டும் ஜெயிலர் படத்திற்கு வரும் பிரச்சனை.. நெல்சனை வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்

ஹைதராபாத்தில் ஜெயிலர் படத்திற்கு செட்டெல்லாம் போட்டாச்சு. ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்க இருந்தது. நெல்சன் இதற்காக தன்னைப் பெரிதும் தயார்படுத்திக் கொண்டு இருந்த நேரத்தில் இடியாய் ஒரு செய்தி இப்போது வந்துள்ளது.

ஏற்கனவே இந்தப் படம், ரஜினியை வைத்து நெல்சன் பண்ணப் போகிறார் என்று சொன்னதுமே, எப்படி ரஜினி இதற்கு ஓகே சொன்னார், பீஸ்ட் படம் ஓடவில்லை, நெல்சன் இடம் சரக்கு தீர்ந்தது என்றெல்லாம் பேசி சமூக வலைதளங்களில் நெல்சனை வாட்டி வதைத்தனர் மக்கள்.

ஒருவழியாக இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். படத்தின் டைட்டிலும் ஜெயிலர் என்று மாஸ் அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்திற்காக ரஜினி எனக்கு 3 மாதங்களிலிருந்து 6 மாதம் வரை ஓய்வு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், நெல்சன் கதையை மெருகேற்றிக் கொண்டிருந்தார் .

கடைசியாக ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் சூட்டிங் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது ஒரு பெரிய குண்டு நெல்சனின் ஆசையில் விழுந்தது. இப்பொழுது ஹைதராபாத்தில் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவித்துவிட்டனர் சினிமாத்துறையினர்.

அங்கே தியேட்டரில் டிக்கெட் விலை அதிகம் ஆகியது, அதனால் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் சம்பளத்தை குறைக்குமாறும், தியேட்டர்களின் டிக்கெட்டையும் குறைக்குமாறும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் இறங்கியுள்ளனர். இதுதான் இப்போது நெல்சனுக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளது.

பல கோடிகள் செலவு செய்து இந்த படத்திற்கு செட் போட்டும், இப்படி இழுத்தடித்துக் கொண்டே போகிறது. நாலாபக்கமும் நெல்ச கோ கோ கோனுக்கு கெட்ட நேரம் பிடித்து ஆட்டி வருகிறது.

- Advertisement -

Trending News