20 ஓவர் உலகக் கோப்பை நமக்கு இல்லை.. இந்தியாவின் பலவீனத்தை நன்றாகப் புரிந்த எதிரணியினர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக எல்லா நாடுகளும் ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி பெரிய, பெரிய நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடி அசத்தி வருகிறது.

இந்தத் தொடரில் இந்தியாவிற்கு பின்னடைவாக 2 சீனியர் வீரர்கள் அணியில் இருந்து காயம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் போட்டியை மாற்றக்கூடிய வீரர்கள்.

Also Read: கேவலமான கேரக்டரை மாற்றாத விராட் கோலி.. கேப்டன் பதவியை பறித்தாலும் திருந்தாத செயல்கள்

காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக யாரை சேர்ப்பது என்று மொத்த தேர்வுக்குழு திணறி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வீரராக தீபக் சஹர் மற்றும் உள்ளார்.

இருந்தாலும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் இந்தியாவிலிருந்து அனுப்பலாம் என்ற கணக்கின்படி உம்ரன் மாலிக்கை இந்திய அணியில் எடுத்துள்ளனர். இருந்தாலும் ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் இடத்திற்கு அக்சர் பட்டேலை தேர்வு செய்துள்ளனர்.

Also Read: விராட் கோலியை மாறி மாறி அடிக்கும் பிசிசிஐ.. ஆதரவுக் குரல் எழுப்பிய பாகிஸ்தான் வீரர்

பும்ரா இல்லாததால் இந்தியாவின் பௌலிங் யூனிட் மிகவும் வலுவிழந்து உள்ளது. அவர் ஒருவரே எதிரணியினரின் அதிரடி ஆட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசுவார். இவர் இல்லாததால் எதிரணியினர் சுலபமாக இந்தியாவை சமாளித்து விடுவார்கள்.

அவரை தவிர்த்து எதிரணியினரை அச்சுறுத்தும் ஒரு பந்து வீச்சாளர் என்றால் முகமது சமி அவரையும் இந்திய அணி எடுத்ததாக தெரியவில்லை. இப்படி மொத்த பலவீனமும் வைத்துக்கொண்டு விளையாடுவது இந்திய அணிக்கு நல்லதன்று. ஆகையால் இந்த உலகக் கோப்பை இந்தியாவிற்கு இல்லை என்று முன்னாள் வீரர்கள் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இந்திய அணிக்குள் விராட் கோலி செய்யும் குழப்பம்.. பிரச்சனை இருப்பது உண்மைதான் போல