உள்வாடகைக்கு விட்டு மாட்டிய அனிருத்.. என்ன அனி இப்படி பண்ணிட்டீங்களே?

கோலிவுட்டில் இளம் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுதவிர நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள 61வது படத்திற்கும் அனிருத்திடம் இசையமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் மீது மிகப்பெரிய புகார் ஒன்று எழுந்துள்ளது. அதாவது அனிருத் சென்னையில் மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தான் அவரது இசையை கம்போஸ் செய்து வருகிறாராம். அந்த ஸ்டுடியோவிற்கு வாடகை மட்டும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாயாம்.

அந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் துபாயில் உள்ள நிலையில் அனிருத் கடந்த சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. வாடகை குறித்து உரிமையாளர் பலமுறை அனிருத்தை தொடர்பு கொண்ட போதும் அவர் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த உரிமையாளர் நேரடியாகவே சென்னை வந்துவிட்டாராம். இதில் டிவிஸ்ட் என்னவென்றால் உரிமையாளர் சென்னை வந்த செய்தி அறிந்த இசையமைப்பாளர் அனிருத் மும்பைக்கு சென்று விட்டாராம்.

கிட்டத்தட்ட கடன் கொடுத்தவரை பார்த்து கடன் வாங்கியவர் பயந்து ஓடுவார்களே அதுபோல் அனிருத் தற்போது தப்பியோடி உள்ளார். இந்த சம்பவம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் ஒரு படத்திற்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் அனிருத்தால் மாத வாடகை செலுத்த முடியாதா? அதுவும் உரிமையாளரை கண்டதும் இப்படி ஓடி ஒளிவது அசிங்கமாக இல்லையா என்பதுபோல பலர் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். என்ன அனி இப்படி பண்ணிட்டீங்களே?

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்