வெறும் 3 லட்சத்திற்கு இவ்வளவு அக்கப்போரா? மீண்டும் தன் சுயரூபத்தை காட்டும் சிம்பு

சமீபத்தில் வெளியான மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், விநியோகஸ்தர்கள், ஹீரோ என அனைவரையும் ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது.

மாநாடு படம், ஆரம்பிக்கும் முன்பே பல பிரச்சினைகளை சந்தித்தது. தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ பிரச்சனை, பணப்பிரச்சனை, ஹீரோவின் நடவடிக்கை சரியில்லை என பல தரப்பில் பிரச்சினைகள் வந்தவண்ணம் இருந்தது.

ஒரு வழியாக அனைவரையும் சமாதானம் செய்து படத்தை எடுத்து முடித்து விடுவோம் என அக்ரிமெண்ட் போட்டு வெற்றிகரமாக சூட்டிங்கை முடித்து வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு.

மாநாடு படம் சக்கை போடு போட்டது. படத்தின் நாயகனும், வில்லனும் படத்தில் நடிப்பில் மிரட்டினார்கள். மாநாடு படம் பல கோடிகள் வசூலை குவித்தது. படத்தின் வெற்றியை மிகப்பிரம்மாண்டமாக சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடியது படக்குழு.

அந்த வெற்றிப்படத்தில் சிம்புவிற்கு ஒரு பெருந்தொகை சம்பளமாக பேசப்பட்டது. அந்த சம்பளத்தில் வெறும் 3 லட்சம், மட்டும் மிஸ் ஆனது. இதனால் சிம்பு ஒரு ரீல்லிற்கு டப்பிங் பேசாமல் அலை கழித்துள்ளார்.

மாநாடு படம் வெற்றி அடைந்ததால், சிம்புவிற்கு பல வாய்ப்புகள் கைகூடி வந்த வண்ணம் இருக்கிறது. இவர் இப்படி தொடர்ந்து செய்தால் திரையுலகில் பழைய மாதிரி இவர் பெயர் கெட்டுவிடும். புத்திசாலித்தனமாக பிழைத்தால் நல்லது என்று சினிமா துறையில் கூறிவருகிறார்கள்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை