வந்த வேகத்தில் அணியை விட்டு விலகிய தமிழக வீரர்.. பின்னணியில் அரசியல் இருக்கிறதா?

இந்திய அணியில் சமீப காலமாகவே நிறைய அரசியல் ரீதியான தாக்கங்கள் இருக்கிறதா என்று வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக இந்திய அணியில் தமிழக வீரர்கள் மட்டும் அல்லாது மற்ற வீரர்கள் அணியில் சுலபமாக இடம் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவது அரிதிலும் அரிதான ஒன்று. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதல் அஸ்வின் வரை இன்றுவரை தமிழக வீரர்கள் இடம் பெறுவது என்பது ஒரு பேசுபொருள் ஆகவே இருந்து வருகிறது.

யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் நடராஜர் இந்திய அணியில் தனது  திறமையை நிரூபித்துக் காட்டிய போதிலும். அவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

நடராஜனுக்கு இந்திய அணியின் வாய்ப்புகள் மறுக்கப்பட காரணமாக பேசப்படுவது அவருடைய பிட்னஸ். நடராஜன் ஒரு போட்டியில் விளையாடினால் அடுத்த போட்டியில் காயம் காரணமாக விளையாடுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

நடராஜன் இப்பொழுது தனது முழு உடற் தகுதியை நிரூபித்துக் காட்டிய போதிலும். அவருக்கு இந்திய அணியின் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

நடராஜனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதன் பின்புலத்தில் ஏதேனும் அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கிறதா அல்லது அவரது திறமையில் சந்தேகம் இருக்கிறதா என்பது தெரியவில்லை

Sharing Is Caring:

அதிகம் படித்தவை