விசுவை நம்பி கொடுத்த வாய்ப்பு.. பல மடங்கு லாபம் பார்த்த ஏவிஎம் நிறுவனம்

தமிழ் சினிமாவில் பெண்களின் மகத்துவத்தை பற்றி தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு காட்டியவர் இயக்குநர் விசு. குடும்ப கதையை மையப்படுத்தி அதில் நடக்கும் இயல்பான விஷயங்களை தன்னுடைய பாணியில் தருவதில் அவர் மிகவும் திறமையானவர்.

அப்படி இவர் நடித்து, இயக்கிய திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இந்த திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், சந்திரசேகர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் கூட்டு குடும்பத்தையும், அதில் நடக்கும் எதார்த்தமான பிரச்சினைகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த விசுவின் மீது அபார நம்பிக்கை வைத்து ஏவிஎம் இப்படத்தை தயாரித்தது. வெறும் 15 இலட்சத்தில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பல மடங்கு வசூலை வாரி குவித்தது.

இப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கரைபுரண்டது. படம் வெளியான சமயத்தில் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் நொந்துபோன ரசிகர்களும் இருந்தனர். இப்படம் 50 நாட்களை கடந்து 100 நாட்கள் வரை ஓடி சாதனை புரிந்தது. வசனங்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் விசு இந்த படத்தில் அசத்தலான வசனங்கள் மூலம் அனைவரின் கைதட்டலையும் பெற்றார்.

அதிலும் இதில் வேலைக்காரப் பெண்ணாக நடித்த மனோரமா ஆச்சி பேசும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் வெளிவந்து 33 வருடங்கள் கடந்தும் இன்றும் ரசிகர்கள் நினைவில் நீங்காமல் இருக்கிறது.

இந்தப் படம் விசுவின் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும், முக்கிய திருப்புமுனையாகவும் இருந்தது. இந்தப் படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது நடிகர் எம்ஜிஆர் அவர்கள் படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி, அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் ஆதிக்கம் இருந்த 80 கால கட்டத்தில் வெறும் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பெற்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பல இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை