முட்டி மோதி மண்டையை உடைத்து, நொந்து போன ஆஸ்திரேலியா அணியினர்.. தம்பி இன்னும் பயிற்சி வேண்டும்பா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டெஸ்ட் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இந்த போட்டி பரபரப்பாக நடைபெற்றது.

இந்தியாவிற்கு இலக்காகக் கடைசி இன்னிங்சில் 407 ரன்களை ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. போட்டி முழுவதும் ஆஸ்திரேலியா கைவசம் தான் இருந்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்தனர். ரோகித் சர்மா அரைசதம் அடித்து வெளியேறினார். அவரை தொடர்ந்து கில், ரஹானே விக்கெட்டையும் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

அதன்பின் ஒரு பக்கம் பண்ட் அதிரடியாக பேட்டிங் செய்ய இன்னொரு பக்கம் புஜாரா நிதானமாக ஆடினார். இவர்கள் இருவரும் மாறி மாறி ஆடுவதை ஆஸ்திரேலியா பவுலர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். பேட்ஸ்மேன்கள் பண்ட் – புஜாரா அவுட்டான பின் விஹாரி, அஸ்வின் இருவரும் களமிறங்கினார்கள்.

Pant-Pujara-Cinemapettai.jpg
Pant-Pujara-Cinemapettai.jpg

இதையடுத்து காயத்தோடு ஆடிய விஹாரி – அஸ்வின் இருவரும் டிபன்ஸ் ஆட தொடங்கினார்கள். சிக்ஸர், பவுண்டரி மட்டுமல்ல சிங்கிள் கூட அடிக்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணியும் அஸ்வினை சுற்றி 5 பீல்டர்களை நிறுத்தியும் கூட அவர்களால் அஸ்வினை சாய்க்க முடியவில்லை.

Ashwin-Cinemapettai.jpg
Ashwin-Cinemapettai.jpg

ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுமை இழந்து, கோபம் அடைந்தனர். அஸ்வினையும்,விஹாரியையும் ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் பாராங்கல் போன்று அசையாமல் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் அஸ்வினை வம்பிழுக்க, அஸ்வின் அதிரடியாக பேட்டிங் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றினார்.

Vihari-Cinemapettai-1.jpg
Vihari-Cinemapettai-1.jpg

இந்திய அணி இன்று 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துது. மொத்தம் 131 ஓவர்கள் பேட்டிங் செய்து 334 ரன்களுக்கு 5 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி டிரா செய்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்