குழந்தை பிறந்த கையோடு அடித்து நொறுக்கும் அட்லீ.. பதான் வசூலுக்கு வைத்த டார்கெட்

அட்லீ இயக்கத்தில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக எந்த படமும் வெளியாகவில்லை. ஏனென்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் வைத்து பல வருடங்களாக ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானின் சொந்த பிரச்சினை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் ஷாருக்கான் ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. அதன் பிறகு ஜவான் படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி இருந்தது.

Also Read : பிப்ரவரிக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அட்லீ.. ஜனவரியிலேயே பிறந்த வாரிசு

இதுவரை இல்லாத அளவுக்கு பதான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி வசூலையும் வாரிக் குவித்துள்ளது. ஆகையால் பதான் படத்தின் வசூலை முறியடிக்கும் அளவிற்கு ஜவான் படத்தை எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அட்லீ செயல்பட்டு வருகிறாராம்.

இந்நிலையில் அட்லீக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று தான் அவரது மனைவி பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது குழந்தை பிறந்த கையோடு இன்று ஜவான் படத்தின் சூட்டிங் காக அட்லி வந்து விட்டார். ஜவான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

Also Read : அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்

ஷாருக்கானின் சண்டைக் காட்சிகள் 6 நாட்களில் படமாக்கப்பட உள்ளது. இதில் சன்யா மல்ஹோத்ரா, விஜய் சேதுபதி மற்றும் பிரியாமணி ஆகியோர் பங்குபெற உள்ளனர். மேலும் விரைவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் மற்ற வேலைகளை முடித்துவிட்டு இந்த ஆண்டுக்குள் ஜவான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பாலிவுட்டில் தொடர் தோல்வியை தழுவி வந்த நிலையில் பதான் படம் மூலம் ஹிந்தி சினிமாவை ஷாருக்கான் தூக்கி நிறுத்தி உள்ளார். அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஜவான் படத்தையும் மாபெரும் வெற்றி படமாக கொடுக்க வேண்டும். அந்த வகையில் அட்லீ மீது முழு நம்பிக்கையை ஷாருக்கான் வைத்துள்ளார்.

Also Read : மும்பையில் மொத்த வித்தையையும் காட்டும் அட்லீ.. 400, 500 கோடி எல்லாம் மேட்டரே கிடையாது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்