1000 கோடி கொடுத்த தைரியம்.. விஜய் சேதுபதியை வைத்து பெத்த லாபம் பார்க்கும் அட்லி

Director Atlee: அட்லி இப்போது டாப் ஹீரோக்களின் சாய்ஸாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் ஜவான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

1000 கோடி வசூலித்த இப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது. அதனாலயே அவர் அடுத்ததாக யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது.

அதன்படி தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை இயக்குகிறார். இப்படத்திற்காக இவருக்கு மிகப்பெரும் தொகை ஒன்றும் வர இருக்கிறது.

தயாரிப்பாளர் அட்லியின் பிளான்

அதை வைத்து தான் இவர் தற்போது பல பிளான்களை போட்டுள்ளார். அதன்படி தற்போது தெறி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

அப்படத்தை அட்லி தான் தயாரிக்கிறார். அதைத்தொடர்ந்து தமிழிலும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். விஜய் சேதுபதி தான் அதன் ஹீரோ.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி இணைவது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் அட்லி பெத்த லாபம் பார்க்கவும் கணக்கு போட்டிருக்கிறார். ஆக மொத்தம் இயக்குனர் என்பதை தாண்டி தயாரிப்பாளராகவும் அவர் இரட்டை குதிரையில் சவாரி செய்கிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை