பிரபுவுடனான 5 வருட காதல் பிரிவுக்கு காரணம் என்ன? 20 வருடம் கழித்து வாயைத் திறந்த குஷ்பு

சினிமா வட்டாரங்களில் பல நடிகர் நடிகைகள் காதல் சர்ச்சையில் சிக்கியது என்னமோ வாஸ்தவம்தான். ஆனால் அதில் எவ்வளவு பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதுதான் கணக்கு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானது பிரபு மற்றும் குஷ்பு காதல் தான்.

பிரபு மற்றும் குஷ்பு ஆகியோரின் ஜோடி அழகாக இருப்பதாக ரசிகர்கள் முதல் திரையுலக வட்டாரங்கள் வரை கூறியதால் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. கொஞ்ச காலம் இருவரும் காதலித்து வந்ததும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால் திடீரென பிரபு குஷ்புவின் காதலை முறித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதற்கு காரணம் பிரபுவின் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் எனவும் செய்திகள் வெளியானது. அதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் இதுநாள் வரை பிரபு மேலான காதல் பற்றி குஷ்பு எங்கேயுமே பேசியதில்லை. இருந்தாலும் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது போல. சமீபத்தில் குஷ்புவிடம் பிரபுவுடன் இருந்த அழகான காதலை பற்றி சொல்லுங்கள் என கேட்டுள்ளனர்.

kusboo-prabhu-cinemapettai
kusboo-prabhu-cinemapettai

அதற்கு பதில் அளித்த குஷ்பு, அது ஒரு அழகிய நாட்கள் எனவும், என் வாழ்நாளில் மறக்க முடியாத என்றும் இளமையான காதல் தருணங்கள் அது என கூறியுள்ளார். ஆனால் இருவரும் திருமணம் செய்யாமல் போனது துரதிர்ஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காதல் ஏன் முடிவு பெற்றது என்பதை கூறி அவரையும் அவரது குடும்பத்தாரையும் சங்கடத்தில் தள்ள எனக்கு விருப்பமில்லை எனவும், தனக்கும் தற்போது ஒரு குடும்பம் இருப்பதால் அதைப்பற்றி பேச வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையை அழகான நாட்களாக சுந்தர்சி மாற்றி விட்டார் எனவும் கூறியுள்ளார். இருந்தாலும் இன்னமும் ஏதோ ஒரு ஓரத்தில் குஷ்பு மனதில் பிரபு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்பது அவரது பேச்சிலேயே தெரியவந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்