இந்த தனுஷ் பட கொடூர வில்லன் தான் டாணாக்காரன் பட இயக்குனர்.. இவருக்குள்ள இவ்வளவு திறமையா!

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ஒரு மிரட்டலான படம் உருவாகியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு டாணாக்காரன் படத்தின் டீசர் மிரட்டலாக உள்ளது. விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு போலீஸாக வேண்டும் என்னும் வேட்கையில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபடும் பயிற்சி காவலராக நடித்துள்ளார்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து இருக்கின்றனர். இயக்குநர் தமிழ் கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் தமிழ் யாரென பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஒருவர் தான். நாம்தான் அவரை சரியாக கவனித்திருக்க மாட்டோம். ஆம் இயக்குனர் தமிழ் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்தில், மகனை காப்பாற்றுவதற்காக ஒரு பொட்டல் வெளியில் தனுஷ் சிலருடன் சண்டை போடுவார்.

asuran tamil
asuran tamil

அப்போது தனுஷையும், அவருடைய மகனையும் துரத்தி, சுற்றிவளைக்க சிலர் வருவார்கள். அவர்களில் முதன்மையானவர் தான் தமிழ். ஈட்டியை பிடித்துக்கொண்டு செம்ம மாஸாக அந்த காட்சிகளில் தனுஷை சுற்றி வளைக்கும் தமிழ் தான் ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

அடியாளாக ஒரு காட்சியில் மட்டுமே வந்திருந்தாலும் தனது நடிப்புத் திறமையை மிரட்டலாக வெளிப்படுத்தி இருப்பார் இயக்குனர் தமிழ். அதேபோல் இவர் இயக்கிய படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், டாணாக்காரன் படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி, ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள மகிழ்ச்சியான செய்தியையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -