பாகுபலி ஹீரோவுக்கு கிடைத்த அங்கீகாரம்.. ஆசியாவிலேயே இவர அடிச்சுக்க ஆளே இல்ல

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் எங்கோ சென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அவரது புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான பிரபாஸ் பாகுபலி படம் மூலம் உலக அளவில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.

இந்த புகழ் மூலம் அவரது சம்பளம் உயர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அவரது படங்களுக்கான வியாபார எல்லையும் விரிவடைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்த பிரபாஸ், தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் ஒரு சில ஹிந்தி படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான ஆசியாவை சேர்ந்த மிகவும் அழகான 10 ஆண்கள் பற்றிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பிரபாஸ் தான் முதலிடம் பிடித்துள்ளார்.

prabhas-cinemapettai
prabhas-cinemapettai

பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் அப்பாஸ் நக்வி என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இது தவிர இந்தியாவில் இருந்து டிவி நடிகரான விவியன் டி சேனா என்பவர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவிலே மிகவும் அழகான ஆண் என்ற பட்டியலில் பிரபாஸ் முதலிடம் பிடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி தென்னிந்திய நடிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வேண்டிய செய்தியாகவும் இது கருதப்படுகிறது.

பிரபாஸ் தற்போது தேசிய விருது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அவரது 21வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபாஸ் உடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -