சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அதிகபிரசங்கி தனத்தில் அஸ்வினை மிஞ்சிய பவி டீச்சர்.. சர்ச்சையை கிளப்பிய தறிகெட்ட பேச்சு

அஸ்வின் ஒரு காலத்தில் சமூக வலைதளமே அல்லோலபடும் அளவிற்கு ஆட்சி செய்தவர். இவர் ஒரு படத்திலன் புரமோஷனுக்காக வந்த இடத்தில் அதிகப்பிரசங்கித்தனமாக பேசி மாட்டிக்கொண்டர். அந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ளையே தலையிலடித்துக் கொள்ளும்படி செய்தது இவரது பேச்சு.

இந்த வரிசையில் இப்போது இன்னொரு பிரபலமும் மாட்டியுள்ளார். அஸ்வின் பேசியது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் இவர் சர்ச்சையாக பேசி விட்டார். ஒரு கட்டத்தில் அஸ்வின் விளம்பரப் படங்களிலும், பாட்டு ஆல்பங்களிலும் தலைகாட்டி வந்தார்.

இப்படி போய்க்கொண்டிருந்த அஸ்வினின் சினிமா வாழ்க்கை இவர் பேசிய ஒரு பேச்சால் சீரழிந்தது என்றே சொல்லலாம். அதாவது, இவர் 40 கதைகளை கேட்டு இருப்பாராம். அந்த இயக்குனர்கள், கதையை இவரிடம் சொல்லும்போது கதை பிடிக்காமல் தூங்கிவிடுவாராம். அப்படி, இவர் நடித்த ஒரு படத்தின் புரமோஷன் விழாவில் பேசிவிட்டார்.

“தம்பி” நீங்கள் நடித்தது ஒரு படம்தான், அந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. இப்பொழுது இவ்வளவு திமிராக பேசுகிறீர்கள் என்று அவருக்கு எல்லா பக்கமும் எதிர்ப்பு கிளம்பியது. இப்பொழுது அதே வேலையை செய்திருக்கிறார் இரவின் நிழல் படத்தில் நடித்த பவி டீச்சர்.

பார்த்திபன் ஆஸ்கர் விருது வாங்கியே தீரவேண்டும் என்று செதுக்கிக் எடுத்திருக்கும் படம் இரவின் நிழல். இந்தப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் குறும் படத்தில் நடித்த பிரகிதா நடித்துள்ளார். அது மட்டுமின்றி ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இரவின் நிழல்படத்தில் அருவருப்பான நிறைய கெட்ட வார்த்தைகளை பேசியிருக்கிறார் பிரகிதா. நிர்வாணமாக நடித்ததாலும் , கொச்சையான வார்த்தைகளை படத்தில் பயன்படுத்தியதாலும், இவருக்கு நிறைய எதிர்ப்புகள் கிளம்பியது. சமீபத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றில், சேரி மக்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

அந்தக் கதாபாத்திரத்திற்காக நான் அப்படி பேசினேன் என்று சர்ச்சையான பதிலை கூறிவிட்டார். இதனால் இவர் சேரியில் வாழும் மக்களை அசிங்கப்படுத்தியதாகவும். அவர்கள் வாழ்வாதாரத்தை கொச்சைப்படுத்தியதாகவும் சேரி மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு பார்த்திபன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் என்பது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News