அஸ்வின் பேசியதால் வந்த புது சிக்கல்.. விழி பிதுங்கும் தயாரிப்பாளர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் அஸ்வின் குமார். இவர் தற்போது “என்ன சொல்ல போகிறாய்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில், ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அஸ்வின் இந்த படத்தில் நடிப்பதற்கு முன் 40 கதைகளை கேட்டதாகவும் அந்த கதைகளை கேட்கும் போது தூங்கி விட்டதாகவும் கூறினார்.

அஸ்வின் பேசிய அந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக மாறியது. முதல் படம் நடிக்கும் போதே இவ்வளவு திமிரா என்று பலரும் கருத்து தெரிவித்தனர். நெட்டிசன்களின் தொடர் கிண்டல்களால் பயந்துபோன அஸ்வின் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அஸ்வின் தொடர்ந்து கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறார். இது போதாதென்று அஸ்வின் பேசிய பேச்சால் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.

இதனால் அஷ்வின் அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இதன் காரணமாகவே என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் நல்ல விலைக்கு பேசப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அஸ்வின் ஓவரா பேசி வாய் விட்டதால் படத்தை வாங்குபவர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கை இல்லையாம்.

அதனால் இப்படம் தற்போது குறைந்த விலைக்கு பேசப்பட்டு இருப்பதாகவும், இந்த புது சிக்கலால்  படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை