தூங்கு மூஞ்சி மீது உச்ச கட்ட கடுப்பில் இருக்கும் படக்குழு.. பட்டும் திருந்தாத 40 கதை அஸ்வின்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி தொடரின் மூலம் அறிமுகமானவர் அஸ்வின். அதன்பிறகு சில படங்களிலும், ஆல்பம் சாங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அஸ்வினுக்கு பெரிய அளவில் எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எனவே மீண்டும் விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் பலர். அதேபோல் இந்நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அஸ்வினுக்கு வெள்ளித்திரையில் படவாய்ப்பு வரத்தொடங்கியது.

ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின் நடித்திருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இதுவரை 40க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன், கதை கேட்கும்போதே பிடிக்கவில்லையென்றால் தூங்கி விடுவேன் என்ற அஸ்வினின் ஆணவப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

இது ஒரு பக்கம் இருக்க அப்படி எந்த கதையில்தான் அஸ்வின் நடித்திருந்தார் என பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பொங்கல் பண்டிகையை ஒட்டி என்ன சொல்லப் போகிறாய் படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் கதை மிகவும் மொக்கையாக இருந்தது என்றும் 40 கதை கேட்ட அஸ்வின் இந்தக் கதைக்கும் தூங்கி இருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் தோல்விக்கு அஸ்வினுடைய ஆணவப் பேச்சு தான் காரணம் என படக்குழு, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட அஸ்வினிடம் சொல்லியுள்ளார்கள். ஆனால் அஸ்வின் என்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என மறுத்து விட்டாராம்.

இதனால் அஸ்வின் மேல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினர் கோபத்தில் உள்ளார்களாம். இயக்குனரை பாராட்டுவதாக நினைத்து அவருக்கே ஆப்பு வைத்துள்ளார் அஸ்வின். ஒரே ஒரு ஆடியோ லான்ச் இல் மொத்த சோழியையும் முடித்த அஸ்வினுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக்கூடாது என படக்குழு திட்டி வருகிறார்கள்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை