வாய்ப்புகள் குறைய குறைய ஆடையும் குறைந்தது.. வாரிசு நடிகையின் ஓவர் அட்ராசிட்டி

முன்பெல்லாம் கிளாமராக நடிப்பதற்காகவே சில நடிகைகள் இருப்பார்கள். அதனால் ஹீரோயின்கள் பட்டும் படாமலும் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. ஹீரோயின்களே கவர்ச்சி நாயகி ரேஞ்சுக்கு அரைகுறை ஆடையில் நடித்து வருகின்றனர்.

அதிலும் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகைகள் கூட இப்போது கவர்ச்சியாக ஆட்டம் போடுவது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் ஆரம்பத்தில் பக்கத்து வீட்டு பெண் போன்று அம்சமாக நடித்து வந்த வாரிசு நடிகை ஒருவர் இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். அதுவும் பிகினி உடையில் அவர் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

Also read: கர்ப்பமா இருக்கும் போது ஆட வச்சி அழகு பார்த்த டாப் நடிகர்.. 14 ஆண்டுகள் கழித்து வெளியான சீக்ரெட்

ஆரம்பத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு இப்போது வாய்ப்புகள் ரொம்பவே குறைந்து விட்டது. அதிலும் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் யோசித்த அந்த நடிகை தற்போது தாராள கவர்ச்சிக்கு தயாராகி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சற்று பூசியது போன்று இருந்த உடலைகூட அவர் குறைத்து விட்டார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. அதனாலேயே குட்டி குட்டி உடைகளை அணிந்து அவர் அதிரடி காட்டி வருகிறாராம். சமீப காலமாக அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் இப்படிப்பட்ட ஃபோட்டோக்கள் தான் வெளியாகி வருகிறது.

இதுதான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் வாய்ப்புகள் குறைய குறைய நடிகையின் ஆடையும் இந்த அளவுக்கு குறைந்து விட்டதே என்று பலரும் கேலி செய்து வருகின்றனர். தற்போது கூட அவர் வெளிநாட்டில் நீச்சல் உடையில் ஹாயாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த பலரும் நடிகை இந்த அளவுக்கு இறங்கி விட்டாரே என ஆச்சரியப்பட்டு போகிறார்கள். அப்படியாவது அவருக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: திருமணமான 15 நாளிலேயே காணாமல் போன கணவன்.. 15 வருடங்களாக எதையும் அனுபவிக்காமல் காத்திருக்கும் 49 வயது நடிகை

- Advertisement -