அஜித் கூடவே ஹீரோவா போட்டி போட்டு.. இப்ப அவருக்கே வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஏகே 62 படத்திற்காக நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சில காரணங்களால் அவர்கள் மறுத்து விட்டதால் இப்போது வேறு ஹீரோயினை படக்குழு தேடி வருகிறது.

Also Read : விஜய்யுடன் நடித்து மார்க்கெட்டை குறைத்துக் கொண்ட அஜித்.. பிரபலத்திடம் புலம்பி தீர்த்து விட்டாராம்

இந்நிலையில் ஏகே62 படத்தில் வில்லனை புக் செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். பெரும்பாலும் அஜித் படங்களில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அதேபோல் ஏகே 62 படத்திலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாம்.

ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக அஜித் கூடவே போட்டி போட்ட நடிகரை தற்போது அவருக்கே வில்லன் ஆக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். ஹீரோவாக பெண் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகர் இப்போது வில்லனாக மாஸ் சம்பவம் செய்து வருகிறார். அதாவது அரவிந்த் சாமி தான் அஜித்துடன் மோத இருக்கிறார்.

Also Read : 6 முறை விஜய், அஜித் பொங்கலுக்கு மோதிக்கொண்ட படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் மூலம் அரவிந்த்சாமி முத்திரை பதித்துள்ளார். ஏகே 62 படத்தில் இவர் நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் ஏற்கனவே அஜித், அரவிந்த் சாமியுடன் நடித்திருப்பது பலரும் அறியாத ஒரு விஷயம். அதாவது சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரகுவரன் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான பாசமலர்கள் என்ற படத்தில் அஜித் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு இவர்களது காம்போவில் படம் வெளியாகவில்லை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது ஒரே திரையில் அஜித் மற்றும் அரவிந்த்சாமி இணைய உள்ளனர். மேலும் ஏகே 62 படத்திற்காக மற்ற கதாபாத்திரங்களை பார்த்துப் பார்த்து விக்னேஷ் சிவன் தேர்வு செய்து வருகிறாராம். விரைவில் இந்த படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளது.

Also Read : போனி கபூருக்கு தோல்வி பயத்தை காட்டிய வாரிசு டிரைலர்.. அஜித் சொன்ன ஒரே வார்த்தை!

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -