போதை வழக்கில் ஷாருக்கான் மகன் சிக்கியது எப்படி? அட்லியை கைகாட்டும் இயக்குனர்கள்

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கும் லயன் படத்தை ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக படக்குழு பல மாதமாக காத்திருந்த நிலையில் நேற்று தான் படக்குழுவினர் அனைவரும் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதாவது ஷாருக்கான் ஸ்பெயின் நாடு செல்வதற்கு முன்பே ஷாருக்கான் மகன் போதை வழக்கில் கைதானார். ஆர்யன் கான் நடுக்கடலில் மது அருந்தி தனது நண்பர்களுடன் விருந்தினை கொண்டாடியுள்ளார். அப்போது பிரபலங்கள் பலரும் போதையில் இருந்த தகவல் மும்பை போலீசாருக்கு கிடைக்க உடனே விரைந்து சென்று அனைவரையும் கைது செய்தனர்.

இதில் ஆர்யன் கான் மகன் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் விஐபி நண்பர்கள் என பலரும் சிக்கியுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த ஷாருக்கான் தற்போது தனக்கு தெரிந்த அரசியல் பிரமுகர் மற்றும் பிரபலங்களிடம் உதவி செய்யுமாறு கேட்டதாக கூறுகின்றனர். பலவற்றிற்கும் குரல்கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள் தற்போது ஆர்யன் கான் போதை வழக்கில் சிக்கியதற்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனை பார்க்கும் போது இதில் ஒரு சில பிரபலங்களும் இருப்பார்கள் என்பதால் தற்போது அனைவரும் அமைதியாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் ஆரியன் கான் மகன் போதை வழக்கில் சிக்கியதற்கு பலரும் பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறியுள்ளார். ஆனால் பாலிவுட்டில் இருக்கும் சில இயக்குனர்கள் தமிழ் இயக்குனருடன் கைகோர்க்கும் முன்பே ஷாருக்கான்னிடம் தற்போது உனக்கு நேரம் சரியில்லை படம் பண்ணாதே எனக் கூறினார்கள் ஆனால் ஷாருக்கான் நடிப்பேன் என கூறினார்.

bayilvan-ranganathan-cinemapettai
bayilvan-ranganathan-cinemapettai

தற்போது அட்லி உடன் ஷாருக்கான் இணைந்துள்ளதால் தான் ஆர்யன் கான் போதை வழக்கில் சிக்கியதாக பாலிவுட்டில் சில இயக்குனர்கள் முணுமுணுப்பதாக கூறினார். இதனைக்கேட்ட நெட்டிசன்கள் வாய் இருக்குன்னு என்ன வேணாலும் சொல்லக்கூடாது. அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு எப்பப்பாரு  தேவையில்லாமல் பயில்வான் ரங்கநாதன் இந்த மாதிரி கூறி வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்