சாயிஷாவுக்கு முன்னாடியே அவரது அம்மாவை உஷார் செய்த ஆர்யா.. கன்னுக்குட்டிக்கு வீசிய வலையில் விழுந்த பசுமாடு!

நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் ப்ளேபாய் நடிகராக சுற்றிக்கொண்டிருந்த ஆர்யா திடீரென தன்னைவிட 15 வயதுக்கும் குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியது.

விஷால் ஆர்யா எல்லாமே கடைசி வரை திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்வோம் என்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள். ஆனால் திடீரென ஆர்யா, கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சாயிசாவை பிடித்துப்போய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக தனக்கு பெண் தேடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கடைசியில் பிடிக்கவில்லை என ரிஜக்ட் செய்து விட்டார்.

இந்த நிகழ்ச்சி பல்வேறு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. அது தெரிந்தும் சாயிசா எப்படி காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் என்ற கேள்வி அனைவருக்குமே இருந்தது. இருவருக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது எப்படி காதல் மலர்ந்தது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரங்களிலும் புரியாத புதிராகவே இருந்தது.

இதற்கான விடையை சமீபத்தில் ஆர்யா தெரிவித்துள்ளார். ஆர்யா கண்ணுகுட்டிக்கு வலை வீசாமல் நேரடியாக பசுமாட்டிற்கு வலைவீசி கன்னுக்குட்டியை கவுத்தி விட்டாராம். முதலில் சாயிஷாவை காதலிப்பதை சாயிஷாவின் அம்மாவிடம்தான் கூறினாராம் ஆர்யா.

arya-sayeesha-cinemapettai-01
arya-sayeesha-cinemapettai-01

மேலும் சாயிஷா இல்லாமல் இருக்க முடியாது எனவும், அவரை நன்றாக பார்த்துக் கொள்வேன் எனவும் உத்தரவாதம் கொடுத்தாராம். மேற்கொண்டு சாயிஷாவின் அம்மாவை எங்கு பார்த்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஐ லவ் யூ ஆவது சொல்லி விடுவாராம். இதன் காரணமாகவே அம்மாவுக்கு ஆர்யாவை பிடித்துப்போக தன்னுடைய மகள் சாயிசா கன்வின்ஸ் பண்ணி காதல் திருமணம் செய்து வைத்துள்ளார் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்