மனைவி சாயிஷாவுக்காக ஆர்யா எடுக்கப்போகும் ரிஸ்க்.. சொந்தக் காசில் சூனியம் வைக்கிறது இதுதானா?

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஆர்யா சாயிஷாவுக்காக ஒரு மிகப்பெரிய ரிஸ்க் ஒன்றை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நட்சத்திர ஜோடிகள் அதிகம். ஆனால் அனைவரையும் கவர்ந்தார் ஜோடிகள் குறைவுதான். அந்த வகையில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா ஆகியோருக்குப் பிறகு ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக இருப்பது ஆர்யா மற்றும் சாயிஷா தான்.

சாயிஷா ஆர்யாவை வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் மார்க்கெட் உயரும்போது ஆர்யாவை திருமணம் செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணத்திற்கு பிறகு சாயிஷா நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனால் ஆர்யாவுக்கு அப்படி இல்லை. திருமணத்திற்கு பிறகு மீண்டும் தன்னுடைய இழந்த மார்க்கெட்டை பிடித்துள்ளார். ஆர்யா திருமணத்திற்குப் பிறகு வெளியான மகா முனி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து டெடி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய மனைவியை சினிமாவில் மீட்டெடுப்பதற்காக மீண்டும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளாராம். ஆர்யா ஆரம்பத்தில் நிறைய படங்களை தயாரித்துள்ளார்.

arya-sayeesha-01
arya-sayeesha-01

அதில் பல நஷ்டங்களை சந்தித்ததால் தற்போது தயாரிப்பை ஓரம் கட்டிவிட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் சூர்யா, மனைவி ஜோதிகாவுக்கு உதவி செய்தது போல் ஆர்யா தன்னுடைய மனைவி சாயிஷாவுக்காக புதிய படங்களை தயாரிக்க உள்ளாராம். இதற்காக இளம் இயக்குனர்கள் பலரிடமும் சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் கேட்டு வருகிறாராம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை