சார்பட்டா படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இவைதான்.. பார்த்து பார்த்து செதுக்கியிருக்கும் பா ரஞ்சித்

2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான காலா படத்தை இயக்கியதற்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இடையில் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த பா ரஞ்சித் தற்போது மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

ஆர்யா நடிப்பில் 80 கால கட்டங்களில் நடந்த பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்காக ஆர்யா ஹாலிவுட் நடிகர்கள் ரேஞ்சுக்கு தனது உடலமைப்பை மாற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் போஸ்டரை பார்க்கும்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமான நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் பா ரஞ்சித்.

பா ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளது அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது. மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

sarpatta-characters
sarpatta-characters

ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த காலகட்டத்தை ஞாபகப்படுத்தும் அளவுக்கு தரமாக உருவாக்கியுள்ளார் பா ரஞ்சித். இருந்தாலும் பா ரஞ்சித் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்தை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.

அந்த படத்திலும் குத்துச்சண்டை பரம்பரை சம்பந்தப்பட்ட கதைதான் எடுக்கப்பட்டிருக்கும். இதிலும் அதே போன்ற கதைக்களம் தான் இருப்பதாக இந்த வீடியோவை பார்க்கையில் தோன்றுகிறது. இருந்தாலும் பா ரஞ்சித் ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என நம்பலாம்.

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -