திருமணம் செய்வதாக 71 லட்சம் பண மோசடி செய்த வழக்கு.. எல்லாம் கூடி வர நேரத்தில் இது வேறயா எனப் புலம்பும் ஆர்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றன. அதனால் தற்போது ஆர்யாவிற்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆர்யா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் இதனை சினிமா பிரபலங்கள் பலரும் பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். அதிலும் ஒரு சில பிரபலங்கள் ஆர்யா எப்போதும் காதலியே இருப்பார் எனவும் கூறியுள்ளனர்.

தற்போது ஆர்யா மீது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வித்ஜா என்பவர் ஆர்யா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் பணம் மோசடி செய்ததாகவும் கிட்டத்தட்ட 71 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார்.

arya-cinemapettai

அதனால் நடிகர் ஆர்யா மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. விசாரணை நிலையை குறித்து பதிலளிக்க சிபிசிஐடி சிறிது கால அவகாசம் கேட்டதை அடுத்து ஆர்யா மீதான வாழ்க்கை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது.

இந்த விசாரணைக்கு பிறகு தான் ஆர்யா மீது அளிக்கப்பட்டுள்ள புகார் பற்றிய விரிவான விவரங்கள் வெளியாகும் என்பது தெரிய வருகிறது. ஆனால் இதை பற்றி ஆர்யா இது வரை எந்த ஒரு இடத்திலும் பேசியதில்லை. மேலும் புகார் குறித்து நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்படும்.

- Advertisement -