3 நடிகைகளின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய ஆர்யா.. கல்யாணம் வரை சென்று காணாமல் போன காதல்

தமிழ் சினிமாவின் பிளேபாய் நடிகர் என்ற அடைமொழியுடன் வலம் வந்தவர் ஆர்யா. எப்பேர்ப்பட்ட பேரழகி நடிகையாக இருந்தாலும் தன்னுடைய வலையில் வீழ்த்துவதில் கில்லாடி. மேலும் நடிகைகளின் நெருங்கிய நட்பு வட்டாரங்களில் இருப்பதும் இவர் ஒருவர்தான்.

ஆர்யா தன்னுடைய சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் தன்னுடன் நடித்த சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி திருமணம் வரை சென்று நின்ற கதை பல உள்ளது. அதில் மூன்று நடிகைகளைப் பற்றி பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் நிலா என்ற பெயரில் வலம் வந்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா. அவருடைய உண்மையான பெயர் மீரா சோப்ரா. இவரும் ஆர்யாவும் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

arya-pooja-cinemapettai
arya-pooja-cinemapettai

அதனைத் தொடர்ந்து ஆர்யா தன்னுடன் சில படங்களில் தொடர்ந்து நடித்த நடிகை பூஜாவை காதலித்து வந்தாராம். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஒருகட்டத்தில் திருமணம் வரை சென்ற இவர்களது உறவு திடீரென பிரிந்தது.

arya-nila-cinemapettai
arya-nila-cinemapettai

அதேபோல் கலர்ஸ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் வெற்றி பெறும் பெண்மணியை ஆர்யா திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அபர்னதி என்ற பெண் ஆர்யாவை அளவுக்கு அதிகமாக காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவருமே நெருங்கி பழக ஆரம்பித்தனர். ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆர்யா பேமண்ட்டை வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்.

arya-aparnathi-cinemapettai
arya-aparnathi-cinemapettai

அதன் பிறகு அவர் மனதில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி பேட்டி கொடுக்கும் போதெல்லாம் அதில் ஆர்யாவைப் பற்றி பேசாமல் இருப்பதே இல்லை. ஆர்யா தற்போது சாயிஷாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாலும் மீண்டும் ஆர்யாவை ஏற்றுக்கொள்ள ரெடியாக இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யா வெளிநாட்டுப் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த விஷயம் வைரலாகி கொண்டிருக்கும் வேளையில் ஆர்யாவின் பழைய கிசுகிசுக்கள் பற்றி தோண்டியபோது கிடைத்த தகவல்கள் தான் இது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்