அடுத்தடுத்து பேய் படங்களுக்கு குறிவைக்கும் ஆர்யா. டெடி, அரண்மனை-3 எல்லாம் ஹிட்டா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது.

சமீப காலமாக ஆர்யா திகில் திரைப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் ஏற்கனவே டெடி, அரண்மனை 3 போன்ற திகில் படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது கேப்டன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கேப்டன் என்றால் விஜயகாந்த் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த படத்தில் ஆர்யா ஈ சி ஆர் ரோட்டில் தினமும் 50 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவாராம். அப்படி சைக்கிள் ஓட்டும் கேங்குக்கு அவர் தான் தலைவர். அதனால்தான் இந்த படத்திற்கு கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆர்யா இயல்பிலேயே சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பல  சைக்கிள் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த கேப்டன் படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சக்தி சௌந்தர்ராஜன் ஏற்கனவே ஆர்யா நடிப்பில் வெளியான டெடி திரைப்படத்தை இயக்கியவர். அத்திரைப்படம் கோச்சடையான் திரைப்படத்திற்கு பிறகு அனிமேஷன் முறையில் உருவான திரைப்படமாகும். இந்த திரைப் படத்தில் ஆர்யாவுடன் நடிகை சாயிஷா இணைந்து நடித்துள்ளார்.

அதன்பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது மீண்டும் டெடி கூட்டணியில் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆர்யா சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். இது தவிர ஆர்யா, நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு திரைப் படத்திலும் நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்