பிரபல நடிகருக்கு ஆர்யா செய்த உதவி.. கொண்டாட்டத்தில் இருக்கும் படக்குழு

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சந்தானம் சீனிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தந்தை-மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 கோடி தொகை வழங்கி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சபாபதி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பதால், படத்திற்கு இவ்வளவு பெரிய தொகை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறுகின்றனர். ஆர்யாவும், சந்தனமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர் இந்த உதவியை செய்துள்ளாராம்.

தோள் கொடுப்பான் தோழன் என்று சும்மாவா சொன்னாங்க……

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -